Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெசோ மாநாட்டு தீர்மான நகல்களை ஐ.நா. பொதுச் செயலரிடம் மு.க. ஸ்டாலின் நேரில் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, இலங்கையில் அமைதி இல்லை என்றும், போர் முடிந்த பின்னரும் ஈழத்தமிழர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடந்தது.

கூட்டம் முடிந்ததும் கருணாநிதி ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
"டெசோ மாநாட்டு தீர்மான கருத்துக்களை ஐ.நா. மன்றத்தின் செயலாளரையும், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்திடமும் கொடுக்க இருக்கிறோம்.

ஏற்கனவே அறிவித்தவாறு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு,இருவரும் செல்வது குறித்து எடுத்துச் சொல்லி அதன் தொடர்பான விளக்கங்களை எல்லாம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவாதித்தனர்.

கூட்டத்தில் இது தொடர்பாக ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜெனீவாவில் மனித உரிமை செயலாளரை பார்ப்பதற்கும், நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச் செயலாளரை பார்ப்பதற்கும் திகதி கிடைத்தவுடன் இருவரும் டெசோ தீர்மான நகல்களுடன் செல்ல இருக்கிறார்கள். அங்கிருந்து உறுதியானதொரு திகதி இதுவரை வரவில்லை.

இதுதொடர்பாக அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். உறுதியான திகதி கிடைத்தபிறகு தெரிவிக்கப்படும்.

இலங்கையில் அமைதி இல்லை.இலங்கை தமிழர்கள் நிலை, இலங்கையில் இந்திய அரசு மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் திருப்தியாக இல்லை. போர் முடிந்த பின்னரும் ஈழத்தமிழர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.
அந்த தகவல்களையும் டெசோ மாநாட்டு தீர்மான நகல்களுடன் இணைத்து, அதுபற்றி ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் தெளிவாக எடுத்துச் சொல்ல இருவரும் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும். இதற்கான தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தீர்மானங்கள் ஐ.நா.சபையிலும் இந்திய அரசின் ஆதரவுடன் ஏற்கப்பட வேண்டும் என்றார்.

0 Responses to இலங்கையில் அமைதி இல்லை! ஈழத் தமிழருக்கு நிம்மதி இல்லை: கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com