Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லிபியாவின் முன்னாள் அதிபர் மௌமர் கடாபியை சுட்டுக்கொன்றவர்கள் பிரான்ஸ் உளவாளிகளே என லிபியா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் இரகசிய உளவாளி ஒருவரே கடாபியை, அவரது சொந்த ஊரான சேர்த் நகரில் வைத்து சுட்டுக்கொன்றதாகவும், கிளர்ச்சிக்குழுவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

மேலும், சிரிய அதிபர் அல்-அசாத், கடாபியின் சர்வதேச தொலைபேசி இரகசிய இலக்கங்களை கண்டுபிடித்து பிரான்ஸிடம் விற்றுவிட்டதாகவும், இதன் மூலம் கடாபி ஒழிந்திருந்த இடத்தை கண்டுபிடித்த பிரான்ஸ் புலனாய்வு படைவீரர்கள் அவரை உடனடியாக சுட்டுக்கொன்றதாகவும்  அத்தகவல்கள் கூறுகின்றன.  லிபியாவின் தேசிய படைக்கூட்டணி கட்சித்தலைவர் மௌமுத் ஜிப்ரில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக எகிப்து தொலைக்காட்சி ஒன்றுக்கு  செவ்வி அளிக்கையில், கடாபியின் படுகொலையில்  வெளிநாட்டு உளவாளிக்கு தொடர்புள்ளது என்றார்.  இதையடுத்து இத்தாலிய ஊடகமான Corriere Della Sera இத்தகவலை வெளியிட்ட போது, அவ்வாறு கடாபியின் படுகொலைக்கு பின்னர் வெளிநாட்டு உளவாளி இருப்பாராயின் அவர் நிச்சயமான பிரான்ஸ் நாட்டவர் தான் என கூறியது.

2007ம் ஆண்டு சார்கோசி பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக கடாபிக்கு பெருந்தொகையான பணத்தை கையூட்டாக கொடுத்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து கடாபியை உயிரோடு விட்டுவைத்தால்,  மேலும் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என கருதிய சர்கோசி கடாபியை கொன்று விடுவதற்கு சதித்தீட்டம் தீட்டியதாகவும், சிரிய அதிபர் அசாத்துக்கு எதிராக எழுச்சி பெற தொடங்கிய கலவரங்களுக்கு பிரான்ஸிடமிருந்து ஆதரவு வலுப்பெறாது இருப்பதற்கு கடாபியை காட்டிக்கொடுத்து அசாத் உதவி செய்ததாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

எனினும் இத்தகவலை முற்றாக மறுத்துள்ள பிரான்ஸின் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் இவை வெறும் கட்டுக்கதைகள் என்றார். எனினும் பிரான்ஸ் அரச சார்பில் இத்தகவல்களை மறுத்தோ, ஆதரித்தோ எவ்வித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

0 Responses to கடாபியின் படுகொலைக்கு காரணம் பிரான்ஸ்? : லிபிய தகவல்களால் பரபரப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com