Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெதர்லாந்தில் 27-11-2012 செவ்வாய்க்கிழமை வழமைபோல் அல்மேர என்னுமிடத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் நடைபெற இருந்தவேளை இலங்கை அரசுடன் சேர்ந்து ஒருசில தமிழ் சமூகவிரோதகும்பலின் சதிகாரச்செயலால் இறுதி நேரத்தில் அல்மேர கிராமசேவகை அமைப்பால் அந்த இடத்தில் வணக்க நிகழ்வு இடம்பெறுவது தடைசெய்யப்பட்டது.

ஆனாலும் தமிழ் உணர்வாளர்களின் தளராத முயற்சியால் உடனடியாக வேறு மண்டபம் தெரிவு செய்யப்பட்டு அம்ஸ்ரடாம் என்னுமிடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பொது ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள் தேசியக்கொடியேற்றல் பின் மாவீரர் திருவுருவப்படத்துக்கு ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சி கானங்கள் இடம்பெற்றது.

அதைத்தொடர்ந்து மாவீரர் உரை வாசிக்கப்பட்டு பின் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை என்பன இடம்பெற்றன. அதனைத்தொடர்ந்து இவ்வாண்டு இடம்பெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டிய கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டது. இறுதி நேரத்தில் நிகழ்வுக்கான மண்டபம் இடமாற்றம் செய்யப்பட்ட போதும் பல நூற்றுக்கணக்கான மக்கள் திரளாக வந்து இவ்வணக்க நிகழ்விலே பங்கேற்றது எந்த நிலையிலும் எம்மண்ணிற்கும் அதன் விடிவிற்கும் தோளோடு தோள் நிற்போம் என்று உறுதியாகக் கூறுவது போல் இருந்தது. மண்ணின் விடிவிற்காய் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி மண்டபம் நிறைந்த தமிழ் உணர்வாளர்கள் இம்மாவீரர் நிகழ்விலே கலந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி மன நிறைவுடன் அமைதியாக நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

பரிசு வழங்கலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு இறுதியாக தமிழ் உறவுகள் அனைவரும் எழுந்து நின்று நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலைக் கைதட்டிப் பாடி 6.00 மணியளவில் நிகழ்வினை நிறைவு செய்தார்கள்.

0 Responses to தேசிய நினைவெழுச்சி நாள் 2012 - நெதர்லாந்து (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com