நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர்நாள்
2012இ ஒஸ்லோ, பேர்கன், ஸ்தவங்கர், மோல்டே, உல்சன்வீக் துறண்கைம் ஆகிய ஆறு
நகரங்களில் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறிப்பாக ஒஸ்லோவில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமிழினத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்த கார்த்திகை நாயகருக்கு மலர்தூவி சுடரேற்றி தமது வணக்கத்தை செலுத்தினர்.
சரியாக மதியம் 12:45 மணிக்கு மணி ஒலியோடு ஆரம்பமாகிய மாவீரர்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரரின் உதிரத்தால் உருவான தமிழீழத்தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு மலர்தூவி சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டு விடுதலை வீரர்களின் நினைவுகளை மீட்க்கும் விடுதலைகானங்கள் கலைபண்பாட்டுக்கழகத்தின் இளையவர்களால் இதயம் உருகி பாடப்பட்டபொழுது மாவீரமணிகளின் நினைவுகள் கண்மடலை உடைத்தது.
தொடர்ந்து தமிழீழத்தில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட மாவீரர்நாள் அறிக்கை வாசிக்கப்பட்டு தமிழீழவிடுதலைப்போராட்டத்தை தமிழீழத்தேசியத்தலைவர் வழி நின்று தொடர்ந்து முன்னெடுப்பதர்க்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அடிகளார் இன்பநாதனின் சிறப்புரை இடம்பெற்றது அந்த உரையில் அவர் குறிப்பிடும்போது உலகநாடுகளின் அசுரபலத்தைக்கொண்டு தாயகத்தில் எமது பலத்தை சிதைத்த சிங்கள இனவாதம் மீண்டும் புலத்திலுள்ள தமிழ்தேசிய பலத்தை சிதைக்க அடிவருடிகளை ஏவிவிட்டு தமிழரின் விடுதலைப்பயணத்தை முறியடிக்க முனைவதாகவும் இந்த சதிவலை சக்திகளை முறியடிக்க மக்கள் விழிப்பாக இருக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
அடிகளார் அவர்களின் சிறப்புரையை தொடர்ந்து மாவீரர் நினைவாக நடாத்தப்பட்ட ஒவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் தொடர்ந்து முள்ளிவாய்காலில் இறுதிவரை இருந்த போராளியால் எழுதப்பட்ட ஈழ அகதியின் மனவெளியிலிருந்து..என்ற நூல் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் வெளியிடப்பட்டது.
முள்ளிவாய்காலில் இனவழிப்பு நிகழ்தப்பட்ட கோரநினைவுகளை நெஞ்சில் நிறுத்தும் நூலின் வெளியீட்டை அடுத்து தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் இளையவர்களின் விழ விழ எழுவோம் எனும் எழுச்சி நடனம்; இ றம்மன் அன்னை பூபதி தமிழ்கலைக்கூட மாணவர்களின் வரலாறு; நாடகமஇ; நர்த்தன காவிய நடனப்பள்ளி மாணவர்களின் எழுச்சி நடனம் இ றொம்மன் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடமாணவர்களின் எழுச்சி நடனம் ஆகியன மாவீரர்நாள் நிகழ்சிகளின் மகுடமாய் அமைந்ததோடு மட்டுமல்லாது மண்டபத்தில் அமர்ந்திருந்த மக்களின் மனங்களில் உறுதியையும் உணர்வையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. இந்த எழுச்சிமிகுந்த நடனங்களுக்கு மத்தியில் மயூரன் என்ற இளையவரின் சிறப்புரை நோர்வேயிய மொழியில் இடம்பெற்றிருந்தது. அவர் தனது உரையில் தெரிவிக்கின்றபோது மாவீரர்களை கடவுள் என்கின்றார்கள் ஆனால் அதர்க்கும் மேலாகத்தான் நான ;பார்க்கின்றேன் எனவே எமக்காக வீழ்தவர்களின் கனவை நனவாக்க இளையவர்களாகிய நாம் தொடர்ந்து விடுதலை தேரை நகர்த்தவேண்டுமென உறுதியோடு பதிவு செய்துகொண்டார்.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை எல்லோரும் இணைந்து பாடி மாவீரர்நாள் நிகழ்வு 2012 நிறைவுக்கு வந்தது. இதேவேனை மாவீரர்நாள் நிகழ்வினை சிறப்பாக நடாத்த உதவிய மக்களுக்கும் கலைஞர்களுக்கும் குறிப்பாக இளையவர்களுக்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு(நோர்வே)

0 Responses to நோர்வேயில் நடைபெற்ற மாவீரர்நாள் 2012 (படங்கள் இணைப்பு)