தமிழர் தாயக விடுதலைப் போரிலே தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவிரர்களை
நினைவு கூறும் இவ் கார்திகை மாதத்திலே. அவர்களைப் பெற்றெடுத்து ஆளாக்கி
நமது தாயகத்திற்காக அனுப்பிவைத்த அவர்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும்
குடும்பத்தினரை மதிப்பளிக்கும் நிகழ்வு இன் மாலை 6 மணி அளவில் மிச்சம்
பகுதியில் St Barnabas Churchஇல் இடம்பெற்றது.
சுமார் 7மணி அளவில் தமிழீழத் தேசியக் கோடி ஏற்றலுடன் ஆரம்பித்தது. தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கினைப்புக்குழுவின் சார்பாக திரு நவம் அவர்கள ஏற்றி வைத்தார் அதனைத்தொடர்து பொதுச்சுடரினை லெப் கேணல் ஜக்கி அவர்களின் தாயார் திருமதி சரோஜினி மற்றும் மாவீரன் கார்மேகன் அவர்களின் தாயார் திருமதி இராஜேஸ்வரி அவ்ர்களும் ஏற்றி வைத்தனர்.
பின்னர் பிரித்தானியா மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திரு சாஜகான் அவர்கள் மாவீரர் கல்லறைக்கு மலர் மாலை அனிவித்து மலர் வணக்கத்தினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவிரர்களின் தியாகங்கள் மற்றும் மாவீரர்கள் இட்டுச் சென்ற பாதை என்ற தலைப்பில் உரைகளும் நிகழ்ந்தது. மேலும் பிரித்தானியா மாவீரர் பணிமனை பொறுப்பாளர் அவர்கள் நிகழ்த்திய உரையில் மாவீரர் பணிமனையின் அடுத்தகட்ட செயற்திட்டமான மாவீரர்களுக்கான தற்காலிக கோயில் அமைக்கும் திட்டம் தொடர்பாகவும் அத்திட்டத்தின் பயன்களையும் விளக்கிக் கூறினார்.
இறுதியில் மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்களின் கருத்துப் பகிர்வு இடம்பெற்றது இதில் எமது போரட்டம் தொடர்பாகவும் எமது மவீரச் செல்வங்களின் தியாகங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர் மேலும் நாம் அனைவரும் எதிவரும் செவ்வாய்க் கிழமை எக்சல் மண்டபத்தில் ஒன்று கூடி எமது மாவீரச் செல்வங்களை வணங்குவோம் என்று உறுதி எடுத்துக்கொண்டு நிகழ்வை நிறைவு செய்து மண்டபத்திலிருந்து வெளியேறிச்சென்றனர்.

0 Responses to 23.11.2012 அன்று மாலை பிரித்தானியா தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினரால் நடாத்தப்பட்ட மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு (படங்கள் இணைப்பு)