மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் மாவீரர்களது கனவினை வென்றெடுக்க, சனநாயக வடிவில் தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வு பூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது.
எதிர்வரும் நவம்பர் 29-30 டிசம்பர் 01 மற்றும் 02ம் நாட்களில் இது இடம்பெறுகின்றது.
நவம்பர் 29ம் நாள் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வில், பொதுமக்களையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
BRENT TOWN HALL/Forty Lane, Wembley, /Middlesex,HA9 9HD எனும் முகவரியில் 6pm to 10 pm மணிக்கு தொடக்க அமர்வு இடம்பெறுகின்றது.

ஈழத் தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும், தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும், அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைத்துக் கொள்வது குறித்தும், ஐநா வின் உள்ளக மீளாய்வுக் குழுவின் அறிக்கை வழியே சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக ஆணையம் ஒன்று நிறுவப்பட வேண்டிய அவசியம் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வினை உலகத் தமிழர்கள் இணைய வழியூடகங்கள் ஊடாக நேரடியாக காணுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 Responses to பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது பாராளுமன்ற அமர்வு!- பொதுமக்களுக்கும் அழைப்பு!