நவம்வர் 26 விடுதலை
புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை உலகம் முழுக்க கொண்டாடப்பட்டது.
சேலத்தில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் சிலர் அனைமேட்டில் உள்ள மாணவர்கள்
விடுதி முன் திரண்டு பெரிய பிரபாகரன் படத்தை வைத்தனர்.
பின்
அவர் பெயர் பொறித்த கேக்கை கொண்டு வந்து பிரபாகரன் வாழ்க பிரபாகரன் வாழ்க
என முழக்கமிட்டமிட்டபடி கேக் வெட்டி கொண்டாடினர். அந்த வழியாக வரும்
அனைத்து மக்களுக்கும் கேக், மிட்டாய், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை
பகிர்ந்தனர்.
'பிரபாகரன்
எம் தமிழினத்தின் அடையாளம்... ஒரு தமிழனாக எங்கள் இன அடையாளத்தின்
பிறந்தநாளை கொண்டாடுகிறோம். தனி ஈழம் மட்டுமே அங்கு தீர்வு ஐ.நா மன்றம்
தலையிட்டு தனி ஈழம் அமைய உதவ வேண்டும்' என்றார் பிரபாகரன் பிறந்த நாள்
விழாவை ஏற்பாடு செய்த வழக்கறிஞர் பார்த்திபன்.
பின்னர் அனைவரும்
பின்னர் அனைவரும்
'தம்பி தம்பி தம்பி
உலக தமிழர்கள் உன்னை நம்பி.....
நீ தானே எங்கள் தலைவன்
நாங்களெல்லாம் உங்கள் தொண்டன்
பறக்கும் பறக்கும் பறக்கும்
உலக அரங்கத்தில்
தமிழீழ கொடி பறக்கும்
நீர் இல்லாமல் உயிரில்லை
நீ இல்லாமல் எம்மினமில்லை
உன் திசை காட்டிய வழியில்....
தனி ஈழம் அமையும்....'
என பாடல் பாடி கொண்டாடினர்.
உலக தமிழர்கள் உன்னை நம்பி.....
நீ தானே எங்கள் தலைவன்
நாங்களெல்லாம் உங்கள் தொண்டன்
பறக்கும் பறக்கும் பறக்கும்
உலக அரங்கத்தில்
தமிழீழ கொடி பறக்கும்
நீர் இல்லாமல் உயிரில்லை
நீ இல்லாமல் எம்மினமில்லை
உன் திசை காட்டிய வழியில்....
தனி ஈழம் அமையும்....'
என பாடல் பாடி கொண்டாடினர்.



செய்தி, படங்கள்: இளங்கோவன்.




0 Responses to தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடிய சேலம் மாணவர்கள்! (படங்கள் இணைப்பு)