Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை மத்திய உளவுத்துறை முன்னாள் தலைவர் எம்.கே. நாராயணன் மறைத்து விட்டதாக, கூறப்பட்டுள்ள பரபரப்பான குற்றச்சாட்டை, சி.பி.ஐ. மறுத்துள்ளது. மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி கொலை விசாரணையில் ஈடுபட்ட விசாரணை அதிகாரிகளில் ஒருவரான ரகோத்தமன் எழுதி வெளியிட்டுள்ள Conspiracy to kill Rajiv Gandhi – From CBI Files என்ற புத்தகத்தில், தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டே தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ விவகாரம் கொஞ்சம் குழப்பமானது.

கொலை நடந்த தினத்தன்று அந்த ஸ்பாட்டில் வீடியோ எடுக்கப்பட்டது. இந்த வீடியோவை ஒரு கட்டத்தில் விசாரணை அதிகாரிகள் பார்த்திருக்கிறார்கள். அதன்பின் வீடியோ மாயமாக மறைந்துவிட்டது. ரகோத்தமன் கூறும் குற்றச்சாட்டு என்னவென்றால், இந்த வீடியோ, அந்த நாட்களில் ஐ.பி. (Intelligence Bureau) தலைவராக இருந்த எம்.கே.நாராயணன் வசம் இருந்தது என்பதே. அவரிடம் இருந்த வீடியோ, எப்படி மாயமாக மறைந்திருக்க முடியும்? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார் ரகோத்தமன்.

இதை மறுத்துள்ளது சி.பி.ஐ. “ராஜிவ் கொலை வழக்கு புலனாய்வின்போது, சி.பி.ஐ. அற்புதமான முறையில் புலனாய்வு செய்தது. (சொல்பவர், சி.பி.ஐ. அதிகாரி) இந்த புலனாய்வை சுப்ரீம் கோர்ட்டே பாராட்டியுள்ளது. எந்த விதமான தடயமும், எங்கும் மறைக்கப்படவில்லை” என்று மொட்டையாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட வீடியோவுக்கு என்ன நடந்தது என்ற விளக்கம், சி.பி.ஐ.-யின் மறுப்பில் இல்லை! இங்கு குறிப்பிடப்படும் எம்.கே.நாராயணன், தற்போது மேற்கு வங்க கவர்னராக உள்ளார். அவரிடம் கருத்து கேட்கலாம் என கொல்கத்தா ராஜ்பவன் அதிகாரிகளை தொடர்புகொண்டபோது, கவர்னர் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்தபின் தொடர்பு கொள்ளுங்கள் என்ற பதிலே வருகிறது.

சில மீடியாக்களில் வெளியானது போல உளவுத்துறையால் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல இந்த வீடியோ. லோக்கல் காங்கிரஸ்காரர்களின் ஏற்பாட்டில், பாபு என்ற வீடியோகிராபர் எடுத்த வீடியோ அது. கொலை நடந்த தினத்தன்னு, அந்த கூட்டத்தில் நடந்த பல விஷயங்கள் அதில் பதிவாகியிருந்தது, மனித வெடிகுண்டாக வெடித்த தனு, சிவராசன் ஆகியோர் இருந்த காட்சிகள் உட்பட! கொலை நடந்தபின் பாபு, அதே தினத்தில் இந்த வீடியோ கேசட்டை பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷன்வரை கொண்டு போயிருக்கிறார். ஆனால், ஏனோ கொடுக்கவில்லை. மறுநாள், வீடியோ நிறுவன உரிமையாளரின் கைகளில் கொடுத்திருக்கிறார். அதன்பின் வீடியோ, உடனே விசாரணை தொடங்கிய தமிழக அரசின், சி.பி.சி.ஐ.டி. கைக்கு சென்றது. அங்கிருந்து, மத்திய உளவுத்துறைக்கு கை மாறியது.

இந்த விவகாரம், கொஞ்சம் ட்ரிக்கியானது. ராஜிவ் காந்தி கொலையின் தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்று, இந்த வீடியோ கேசட் மாயம்! இதை ரகோத்தமன், இப்போது கிளப்பியுள்ளார். அடுத்துவரும் நாட்களில் இந்த விவகாரம் பரபரப்பாக அடிபடப்போகிறது.


அதிர்வு.

0 Responses to ராஜீவ் காந்தி கொலை: தற்போது கிளம்பிய திடீர் பரபரப்பு: வீடியோ யார் கையில்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com