தமிழகத்துக்கு மின்சாரம் வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம்
உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான
விசாரணையை, நவ 7 ஆம் திகதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்திவைத்து இருக்கிறது.
டெல்லிக்குத் தேவையில்லை என்று ஒதுக்கிய 1721 மெகா வாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த வாரம் உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரணையைத் துவக்கவேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டு இருந்தது.
இருப்பினும் விசாரணைக்கு தேவையான போதுமான விரிவான தகவல்கள் மனுவில் இல்லாத காரணத்தினால் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும், இந்த மனுவின் மீதான விசாரணையை நவ 7 ஆம் திகத்திக்கு ஒத்திவைப்பதாகவும் உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தமிழகத்துக்கு அண்டை மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற முடியவில்லை என்பதற்கான காரணமே வழித்தடங்கள் சரியாக இல்லை என்பதுதான் இதற்கு மத்திய மாநில அரசுகளில் குறை கூறுவதில் பயன் இல்லை என்று மத்திய அமைச்சர் நாராயண சாமி கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

0 Responses to தமிழக அரசின் மின்சாரம் தொடர்பான மனு : 7 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைப்பு