Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (நவ.6)ம் திகதி நடைபெறவுள்ள நிலையில்,
  அதிபர் பாரக் ஒபாமா மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரூம்னி ஆகியோர் தமது இறுதி தேர்தல் பிரச்சாரத்தை இன்று முன்னெடுத்துள்ளனர்.

மடிசன், விஸ்கோன்சின் ஆகிய பிரதேசங்களில் ஒபாமாவும், புளோரிடா, வேர்ஜினியா, நியூ ஹோம்ஷீர், ஒஹியோ ஆகிய இடங்களில் ரூம்னியும் இன்று பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். ஒஹியோவில் இதுவரை எந்தவொரு குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரும் தோற்றதில்லை. எனவே இம்முறையும் ரூம்னிக்கே அங்கு வெற்றி கிடைக்கும் என்கிறார்கள். இதனால் இம்மாநிலத்தை கைப்பற்றுவதற்காக தான் பிரச்சாரம் செய்யும் இறுதி இடமாக ஒஹியோவை நிர்ணயித்திருக்கிறார் ஒபாமா.

இறுதியாக வெளிவந்த கருத்துக்கணிப்புக்கள் பலவற்றில் ஒபாமா - ரூம்னி இருவருமே சம அளவிலான (48%, 48%) வீத வெற்றி வாய்ப்பை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் நேற்றைய கருத்துக்கணிப்புக்களில் ஒபாமா 50% வெற்றி பெறுவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் மொத்தமுள்ள 50 மாநிலங்களில் 12 மாநிலங்களே இத்தேர்தலில் வெற்றிபெறுபவரை தீர்மானிக்க போகின்றன. 'Swing States' எனப்படும் இம்மாநிலங்களில் இருப்பவர்கள் யாருக்கு அதிகமாக ஆதரவளிக்கிறார்கள் என தெளிவில்லாது இருப்பதனால் 'தீர்மானிக்க முடியாத வாக்காளர்கள்' என்கிறார்கள். எனவே இவர்களை தமது பக்கம் கவர்வதற்கே இரு வேட்பாளர்களும் கடும் பிரேயத்தனம் செய்கிறார்கள்.

0 Responses to நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா & ரூம்னி இறுதித்தேர்தல் பிரச்சாரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com