Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில், இலங்கை குறித்து மீண்டும் கவனம் செலுத்தப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னர் இச்சந்திப்பினை மேற்கொள்ள அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமை பேரவை அமர்வின் போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. இதன் போது இலங்கையின் இறுதியுத்தத்தில் நிகழ்ந்ததாக கருதப்படும் போர்க்குற்ற செயல்களுக்கு தண்டனை விதித்தல், உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளை அமல்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு, இலங்கை அரசுக்கு ஒரு வருட கால அவகசாம் கொடுக்கப்பட்டது.

இக்கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைவதால், இவ்விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதில் அமெரிக்கா தற்போது முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்த்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையொட்டி எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிக்கை ஒன்றை ஐ.நாவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், இதையொட்டி அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் முன்னர் தகவல் வெளியாகியிருந்தன.

0 Responses to கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ள அமெரிக்கா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com