எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளான இளம் சமூகத்தினராகிய பல்கலைக்கழக
மாணவர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும், பொலிசாரும் கூட்டாக
தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் கொலைவெறித் தாக்குதல்களை சுவிஸ் தமிழ்
இளையோர் அமைப்பினராகிய நாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு, அனைத்துலக
சமூகம் இதில் உடனடியாக தலையிட்டு மாணவர்களை பாதுகாக்க தக்க நடவடிக்கை
எடுக்குமாறும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிநிற்கின்றோம்.
தாயகத்தில் மாணவ சமுதாயத்தின் உரிமைகள், சுதந்திரம் பறிக்கப்படும் போது அவர்களோடு துணை நின்று அவர்களது போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு இளையோரின் கடமையாகும். அந்தவகையில் தாயகத்தில் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டங்களிற்கு நாம் ஆதரவளிப்பதோடு, அவர்களோடு எப்போதும் இணைந்து நின்று செயற்படுவோம் என்றும் இத் தருணத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்பான எமது ஈழத்து உறவுகளே...!
ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையும் உங்களது அயராத பங்களிப்பின் காரணமாகவே நாம் ஒவ்வொரு முறையும் விழும்போதும் புதிய உத்வேகத்துடன் வளர்ச்சி கண்டு வருகின்றோம். அந்தவகையில் தாயகத்தில் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களிற்கு தங்களது ஆதரவுக் கரங்களை நீட்டி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குமாறு உங்களின் பிள்ளைகள் ஆகிய நாம் மிகவும் அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்.
சிங்கள இனவாத அரசினால் தமிழர்கள் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையை ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்குட்படுத்தி ஈழத்தமிழர்கள் தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமை எனும் அடிப்படை கோட்பாட்டில் தம்மைத் தாமே ஆழ, சுதந்திரமாக வாழ அனைத்துலக சமூகம் வழிகோல வேண்டும் என்பதையும் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம்..

0 Responses to பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்- சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு