மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்கு விஜயம் மேற்கொள்ள மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
8வது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம் ஏற்பாடு செய்துள்ள மாநாடு எதிர்வரும் டிச.4ம் திகதி முதல் 6ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன், அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட விருந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ராஜபக்ச மலேசியாவுக்கு விஜயம் மேற்கோள்ள மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் தற்போது அறிவித்துள்ளது.
மலேசியாவின் அம்பாங்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்த மனித உரிமை அமைப்புக்கள் சில, ராஜபக்சவை மலேசியாவுக்கு அழைக்க கூடாது என மலேசிய அரசிடம் வலியுறுத்தியிருந்தன. இலங்கையில் தமிழின படுகொலை நிகழ்ந்தேறியமைக்கு ராஜபக்ச முக்கிய காரணமானவர் என குற்றம் சாட்டியிருந்ததுடன், ராஜபக்ச மலேசியாவுக்குள் நுழைந்தால் விமான நிலையத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் அந்த அமைப்புக்கள் எச்சரித்திருந்தன. இந்நிலையிலேயே ராஜபக்சவின் மலேசிய விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

0 Responses to ராஜபக்சவின் மலேசிய சுற்றுப்பயணம் திடீர் இரத்து