மாவீரர் நாள்! விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து
சங்கர் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்! ஈழத்
தமிழனின் நெஞ்சம் நெகிழ்கின்ற நாள்! நெஞ்சம் நிமிர்கின்ற நாள்!
மாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள். மரணத்திலும் வித்தாகி வாழுகின்ற வீரர்கள். தம் இனத்திற்காக இன்னுயிரை ஈர்ந்த இளவல்கள். வெடிகுண்டு சுமந்தவர்கள். விடியலைத் தேடியவர்கள். வீரத்தின் விளை நிலங்கள்.
எமது தாய்த் திரு நாட்டின் சுதந்திரத்திற்காக மாவீரர்கள் செய்திட்ட தியாகங்களில் தான் எத்தனை எத்தனை பரிமாணங்கள்! விடுதலைப் புலிகளின் வீரவரலாற்றிலே எமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக வித்தாகி வீழ்ந்திட்ட மாவீரர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும்தான் எத்தகைய வித்தியாசமான தியாக விந்தைகள். அழிக்க வந்த எதிரியை அடக்கப்போன போது செய்த தியாகங்கள், உயிருடன் பிடிபடக் கூடாது என்பதற்காக சயனட் அருந்தி சயனித்த தியாகங்கள், வெடிமருந்துடன் பனைவனின் பாசறைக்குள் பாய்ந்து செய்த தியாகங்கள், மூடப்பட்ட முற்றுகைக்குள் முறிந்து போன வில்லுடன் மோதிச் செய்த தியாகங்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்காக நீரிலும் நிலத்திலும் தாரை வார்த்த தற்கொடைகள்தான் எத்தனை! எத்தனை!
உண்மையை விளக்குவதற்கு உரிமையைப் பெற்றெடுப்பதற்கு உண்ணா நோன்பு இருந்தும் உயிர் கொடுத்திட்ட உத்தமர்கள் பற்றி உரைத்திடவும் இயலுமோ!
ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. (தமிழீழத் தேசியத் தலைவர்)
ஒவ்வொரு ஆண்டும் மாவீர் நாளாகிய இந்தப் புனித நாளில் உளமார எம் வீர்ர்களை நாம் நினைவு கூர்வதானது உண்மையில் எமது நெஞ்சைப் புடம் போட உதவுகின்றது. அந்த வீரத் தியாகிகளை எண்ணிப் பார்த்து எமது இதயங்களில் அவர்களை இருத்துகின்றோம்.
தொடரும் ....

0 Responses to உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் வாரம் - ஆறாம் நாள் இன்று