பிரான்ஸ் பாரிஸில் கேணல் பரிதி அவர்களின் வித்துடலுக்கு பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரண்டு வந்து காலை முதல் மாலை வரை வீர வணக்கம் செலுத்தினர்.
இன்று 25.11.2012 காலை 10.00 மணியளவில் மண்டபத்திற்கு அணியத்தினரின் வாத்திய முழக்கத்துடன் வித்துடல் எடுத்து வரப்பட்டது. பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு.யோசெப் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்தனர்.
தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. பார்த்தீபன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கேணல் பரிதி அவர்களின் வித்துடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினர்.
ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் இருந்தும் மக்கள் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றன.
வித்துடல் விதைப்பு நிகழ்வு எதிர்வரும் 26.11.2012 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு Cimetiere à Pantin 164 av Jean Jaurès 93500 PANTIN metro: AUBERVILLIERS PANTIN 4 CHEMINS (7)
என்ற முகவரியில் இடம்பெறும்.
மேலதிக தொடர்புகளுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (01 43 58 11 42)

0 Responses to கேணல் பரிதியின் வித்துடலுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் அஞ்சலி! (படங்கள், காணொளி இணைப்பு)