Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தபால்துறை பணிகள் ஸ்தம்பித்து போயுள்ளன.

தபால் ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. எனினும், இது தமக்கு பாதகமானது என கூறும் அவர்கள் 7வது சம்பளக் கமிசனை அறிமுகப் படுத்த வேண்டும் என கூறுகின்றனர்.

இதையடுத்து நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டதாகவும், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த போராட்டத்தில் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை, தபால் துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட துறையினர் கலந்து கொண்டுள்ளனர்.

0 Responses to நாடுமுழுவதும் 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஸ்தம்பித்தது தபால்துறை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com