சிறிலங்கா இராணுவத்தினரால் ஏமாற்றிப் படையில் சேர்க்கப்பட்ட தமிழ்ப்பெண்கள்
16 பேர், நேற்று முன்தினம் நள்ளிரவு கிளிநொச்சி மருத்துவமனையில்,
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் தமிழ்ப்பெண்கள் பலர் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம், அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கும் நேற்று அதிகாலை 12.30 மணிக்கும் இடையில் இவர்கள் கிளிநொச்சி மருத்துவமனைக்கு, சிறிலங்கா படையினரால் கொண்டு வரப்பட்டனர்.
திடீரென சுகவீனமுற்றதால், ஏழு தமிழ்ப் பெண் இராணுவ பயிலுனர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஆனால், சுமார் 16 தமிழ்ப் பெண்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
முன்னர், விடுதலைப் புலிகளால் கிளிநொச்சி நகருக்கு மேற்கே சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள கிருஸ்ணபுரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த, நவம் அறிவுக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த போதே இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நவம் அறிவுக் கூடம் தற்போது சிறிலங்கா இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் 6வது பற்றாலியனின் தளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்றுமுன்தினம் இரவு அங்கு கேட்ட பயங்கர சத்தத்தை அடுத்தே, இவர்கள் பயத்தினால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு கூறியுள்ளது.
எனினும், உண்மையில் என்ன நடந்தது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.
பாதிக்கப்பட்ட 16 பெண்களில் பலர் மயக்க நிலையிலேயே கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இவர்கள் அனைவரும், கிளிநொச்சி மருத்துவமனைக் கட்டடத்தின் வடக்கு பகுதியில், ஆய்வுகூடத்தின் முன்பாக உள்ள இலத்திரனியல் கருவிகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறைக்குள் தனிமையாக வைத்து பராமரிக்கப்படுகின்றனர்.
இப்பகுதியில் பொதுமக்கள் நடமாடுவதைத் தடுத்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர், அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை சிறிலங்கா இராணுவ மருத்துவர்களும், தாதிகளுமே பராமரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு, நேற்றுப் பகலில் கூட மயக்கம் தெளியவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
அதேவேளை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள் யார் என்ற தகவல் தெரியாத நிலையில், சிறிலங்கா இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் நேற்று கலக்கத்துடன் ஒன்று கூடியிருந்தனர்.
தமது அனுமதியின்றி, பாதிக்கப்பட்டுள்ள பெண்களை பார்வையிடுவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று சிறிலங்கா படை அதிகாரிகள், கிளிநொச்சி மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளனர்.

0 Responses to சிறிலங்கா படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 16 தமிழ்ப்பெண்களுக்கு நடந்தது என்ன?