ஆர்ஜெண்டீனா அணியின் நட்சத்திர காற்பந்து வீரர் மெஸ்ஸி, ஒரே வருடத்தில் (2012), 86 கோல்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
1972ம் ஆண்டு ஜேர்மனி வீரர் முல்லர் அடித்த 85 கோல்களே இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது. தற்போது அந்த சாதனையை 40 ஆண்டுகளுக்கு பிறகு மெஸ்ஸி முறியடித்துள்ளார்.
லா லிகா கால்பந்து தொடர்பில் ஸ்பெயினை சேர்ந்த ரியல் பெடிஸ் கிளப் அணிக்கு எதிராக பார்சிலோனா கிளப்பில் பங்கேற்று மெஸ்ஸி ஆடிய போட்டியில் 2 கோல்களை அடித்ததன் மூலம் இப்புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார்.
ஆர்ஜெண்டீனா மற்றும் பார்சிலோனா கிளப் அணிகளுக்காக விளையாடி வரும் மெஸ்ஸிக்கு தற்போது தான் 25 வயதாகிறது. ஆர்ஜெண்டீனா அணிக்காக 12 கோல்களையும் பார்சிலோனா அணிக்கு 74 கோல்களையும் அடித்துள்ள மெஸ்ஸி, இந்த சாதனைகளை விட, ஐரோப்பிய உலக கோப்பை போட்டிகளே மிக முக்கியமானது என கூறியுள்ளார்.

0 Responses to மெஸ்ஸியின் உலக சாதனை 86 கோல்கள் இவை தான் (காணொளி இணைப்பு)