சமீபத்தில் பிலிப்பைன்ஸின் மின்டானவ் தீவை மையமாக கொண்டு தாக்கிய போபா
சூறாவளியின் சீற்றத்தால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளதுடன்
1000 பேர் வரை இன்னமும் காணாமல் போயிருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 300 மீனவர்களும் அடங்குவர். தற்போது பாதிக்கப்பட்ட இடங்களில் பொது மக்கள் உணவுப் பஞ்சத்தால் கடும் சிரமத்தை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
பொது மக்களில் பலர் கடும் நிலச்சரிவாலும் வெள்ளப் பெருக்காலுமே உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்களை மீட்கும் பணியும் மிகுந்த சிரமத்தின் மத்தியில் இடம்பெற்று வருகின்றது. உயிர் பிழைத்தவர்கள் குடிநீருக்கும் உணவுக்கும் மற்றும் கம்பளிப் போர்வைகளுக்கும் வழியின்றி அல்லாடுவதாகவும் பாதைகளில் பல முடக்கப் பட்டிருப்பதாலும் தகவல் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப் பட்டிருப்பதாலும் அனர்த்த உதவி அமைப்புக்கள் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இத் தேவைகளை வழங்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 1500 பொது மக்கள் காயமடைந்தும் கிட்டத்தட்ட 3 இலட்சம் (300 000) பொது மக்கள் தமது வதிவிடங்களை இழந்து வெளியிடங்களில் தஞ்சம் புகுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் பிலிப்பைன் அதிபர் பெனிக்னோ அக்குயினோ இல் போபா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களான நியூ பட்டான் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு நேரில் சென்று நிலவரங்களைப் பார்வையிட்டதுடன் நாடு முழுவதும் தேசிய அனர்த்த அவசர காலத்தை பிரகடனப் படுத்தியும் இருந்தார்.
இதன் மூலம் பிலிப்பைன்ஸில் பாதிக்கப் பட்டவர்களுக்காக அவசர உதவித் தொகை சேகரிக்கவும் அடிப்படை பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடு கொண்டு வருவதற்கும் வழி ஏற்பட்டுள்ளது.

0 Responses to பிலிப்பைன்ஸின் போபா சூறாவளி : ஆயிரக்கணக்கானோரை இன்னமும் காணவில்லை?