Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தோனியை நீக்க கிரிக்கெட் வாரியம் தயக்கம் காட்டுவது ஏன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அமர்நாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே சமயம் சச்சின் கிரிக்கெட்டில் இருந்து விலகிக் கொள்ள இதுவே சரியான தருணம் என்றும் கூறியுள்ளார். மேலும், சச்சின் சமீப காலமாகவே சரியாக விளையாடவில்லை, அவர் நல்ல ஆட்டக்காரர் என்பது உண்மைதான், அதற்காக மந்தமாக அவர் ரன்கள் எடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்திய வீரர்கள் ஐ பி எல் போட்டிகளில் கவனம் எடுத்து விளையாடுவதைப் போல இந்தியாவுக்காக விளையாடும் போது கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இந்தியாவுக்காக விளையாட வேண்டும் எனும் போது, சோம்பேறித்தனம் அதிகமாகி விடுகிறதோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது, என கருத்துத் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் ட்ராவிட்.

அதோடு சச்சின் இந்திய அணியில் இருக்கிறார் என்பதே இந்தியாவுக்கு பெரிய பலம் என்றும் கூறியுள்ளார். இதை லட்சுமணன் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to தோனியை கேப்டனிலிருந்து நீக்கத் தயக்கம் காட்டுவது ஏன்? : முன்னாள் கிரிக்கெட் வீரர் அமர்நாத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com