இன்று டிச.1 ம் திகதி உலகெங்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகிலேயே தைவான் நாட்டில்தான், மிகக் குறைந்த வயதுள்ளவர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் படுகிறார்கள் என்கிற காரணத்தினால், அந்நாட்டு அரசு குழந்தைகளைக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை தொடக்கியுள்ளது. குழந்தைகளுக்கு சிவப்பு நிற உடையுடுத்தி, எய்ட்ஸ் ரிப்பன் போல நிற்கவைத்து இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் துவக்கி உள்ளனர் என்று தெரிகிறது.
மனிதர்களை வாட்டி வதைக்கும் நோய்களும், அதை வரும் முன் காப்பதற்கான விழிப்புணர்வையும் பற்றி மக்கள் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே, இப்படிப்பட்ட நோய்களுக்குரிய சர்வதேச தினங்கள் உலகெங்கும் ஒரே தினத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றன.
தமிழகம் உள்ளிட்ட இந்தியா எங்கும் இன்று எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை பள்ளிக் குழந்தைகள், மற்றும் முக்கிய பல்துறை பிரபலங்கள் இப்படிப்பட்ட விழிப்புணவு பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
எயிட்ஸ் பற்றி அறிந்திருக்க வேண்டிய சில சில தகவல்கள் :
கருத்தடை உறை பயன்பாட்டின் முக்கியத்துவம் :
நம்பிக்கையான பாலியல் உறவும், கருத்தடை உறைகள் (Condom) பயன்பாடும் எயிட்ஸ் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக பாதுகாப்பு அளிக்க கூடியன. எனினும், காலாவதியான கருத்தடை உறைகள் அல்லது, முறையாக பத்திரப்படாத கருத்தடை உறைகள் கூட இந்நோய்க்கிரிமிகள் உடலில் பரவக்கூடும். அதாவது இவ்வாறான கருத்தடை உறைகளில் உள்ள மைக்ரோஸ்கோப் துளைகளை பயன்படுத்தி அவை உள்நுழையக்கூடியன.
Oral Sex விளைவு :
எயிட்ஸ் நோயுள்ள ஒருவருடனான பாலியல் உறவின் போது Oral Sex எனப்படும் கை, உதடு&நாக்கு பயன்பாடு, அல்லது விரல்களின் பயன்பாடும் எயிட்ஸ் நோய்த்தொற்றுக்கு முக்கிய காரணமாகும். அதாவது விரலில் சிறிய காயமேதும் இருக்குமாயின் அதனூடாகவும் இந்நோய்க்கிருமிகள் இரத்தத்தில் கலந்துவிடக்கூடியன.
HIV கிருமிகளால் மனித உடலுக்கு வெளியே வாழமுடியுமா?
HIV கிருமிகள் எப்போதும் மனிதனின் உடலிலேயே பிரதானமாக வாழக்கூடியவை. உடலுக்கு வெளியே ஒரு HIV கிருமி வாழ்வதற்கான சாத்தியப்பாடு மிக குறைவு. அதாவது HIV வைரஸ் செல்களிலேயே வாழக்கூடியன. எயிட்ஸ் நோயாளி ஒருவருடன் கைகுலுக்குவதனாலோ, அல்லது அவருடன் நீச்சல் தடாகம், குளியலரை, மலசலக்கூடம் என்பவற்றை பகிர்ந்து கொள்வதனாலோ இன்னொருவருக்கு HIV தொற்று ஏற்படாது.
தாய்ப்பாலின் ஊடாக பரவுமா?
எயிட்ஸ் நோயுடைய தாயொருவர் கர்ப்பமாக இருக்கும் போது அவரது குழந்தைக்கும் HIV நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. குறிப்பாக பிறந்த குழந்தைக்குக்கு எயிட்ஸ் நோயுடைய தாயொருவர் தாய்ப்பால் கொடுக்கும் போதும் இந்நோய்க்கிருமிகள் குழந்தையின் உடலில் செல்கின்றன. இதனாலேயே இவ்வாறான தாய்மாருக்கு சிசேரியன் பிரவசம் பரிந்துரைக்கப்படுவதுடன், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என பரிந்துரைக்கின்றனர்.
நோய்த்தொற்றுடைய இருவர், பாதுகாப்பின்றிய உடலுறவு கொள்ளலாமா?
கணவன், மனைவி இருவருக்கும் HIV நோய்த்தொற்றிருந்தாலும், அவர்கள் அவர்கள் பாதுகாப்பான பாலுறவில் ஈடுபடவேண்டாம். இல்லையேல், HIV நோய்க்கிருமிகள் வேகமாக தமது உற்பத்தியை அதிகரித்துவிடும்.
கொசுக்கள், பூச்சிக்களால் HIV கிருமிகள் பரவுகின்றனவா?
நுளம்புகள், கொசுக்கள், பூச்சிகள் மூலம் HIV பரவுவதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.. அதாவது ஒரு கொசுக்களின் உடலில் நீண்டநேரம் HIV வாழ்வடில்லை. மேலும் பூச்சிகள், கொசுக்கள் மனிதர்களை கடித்தால் அவை தமது இரத்தத்தை மனித உடலில் செலுத்துவதில்லை.
நோயாளர்கள் பயன்படுத்தும் மருந்துகள் எவை?
Antiretroviral drugs எனப்படும் மருந்துகள், HIV நோயாளிகளிகளுக்கு வழங்கப்படுகின்றன. எனினும் இவை முற்றாக வைரஸ் தாக்கத்தை ஒழிப்பதில்லை. HIV வைரஸ் இம்மருந்துகளுக்கும் தக்கணப்பிழைத்துக்கொள்ளும் திறமையை பெற்றுவிடக்கூடியன. உங்களுக்கு கடந்த 72 மணிநேரத்திற்குள் HIV தொற்று ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருதினால், உடனடியாக மருத்துவ உதவியை நாடும் பட்சத்தில் post-exposure prophylaxis (PEP drug) மருந்துக்கள் அந்த HIV வைரஸ்களை கொன்றுவிடக்கூடியன.
உங்களுக்கு எயிட்ஸ் வராது என அலட்சியமான நம்பிக்கை இருக்கிறதா?
HIV கிருமிகள் குறித்த ஒரு இனத்தையோ, மக்களையோ மாத்திரம் தாக்குவதில்லை. உலகின் மிக ஏழ்மையான மக்களை தாக்குவதற்கு எவ்வளவு சந்தர்ப்பம் இருக்கிறதோ அதே போன்று உலகின் முன்னணி கோடீஸ்வரர்களை தாக்குவதற்கும் அதே அளவு சந்தர்ப்பம் இருக்கிறது. HIV நோய்க்கிருமிகள் உங்களது வங்கி கணக்கையோ, உங்களது தோலின் நிறம், நீங்கள் வசிக்கும் நாடு என்பவற்றையோ பார்ப்பதில்லை. எந்தவொரு மனித உடலுக்குள்ளும் HIV தொற்றிவிடக்கூடியன என்பதனை நீங்கள் நம்பவேண்டும்.
சிகிச்சை பெறும் நபர் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியமா?
நீங்கள் HIV நோய்த்தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் போதே, உங்களது கணவனுக்கோ, மனைவிக்கோ அந்நோய்க்கிருமிகளை பரப்ப முடியும். எனவே மருத்துவர்கள் எப்போதும் உங்களுக்கு பாதுகாப்பான பாலியல் உறவையே பரிந்துரைக்கிறார்கள். ஏனேனில் எந்தவொரு சிகிச்சையும் HIV வைரஸுகளை முற்றாக அழித்துவிடக்கூடியவை அல்ல.
புராதன நம்பிக்கை?
எயிட்ஸ் நோயாளர்கள், அங்கவீனமானவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதன் மூலம் HIV குணமாகிறது எனும் புராதன நம்பிக்கை ஒன்று நிலவிவருகிறது.

0 Responses to இன்று சர்வதேச எயிட்ஸ் தினம் : நீங்கள் அறிந்திருக்க வேண்டிய சில தகவல்கள்