Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

2012 நடப்பு நிதியாண்டில் கடந்த ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 5.3 % வீதமாக உள்ளது. எனினும் கடந்த ஆண்டு ஜூலை - செப்டெம்பர் காலகட்டத்தில் 6.7 % ஆக இருந்துள்ளதுடன், இவ்வருட முதல் காலாண்டில் 5.5% வீதமாக இருந்துள்ளது.

செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாம் காலாண்டில் நாட்டின் உற்பத்தி துறையில் 0.8% வீத வளர்ச்சியும், வேளாண்மை துறையில் 1.2% வீத வளர்ச்சியும் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இதுவே பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், மழையின்மை, உற்பத்தி திறனின்மையே இதற்கு காரணம் என்றார்.

தயாரிப்பு துறை எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் காணவில்லை. இந்த துறைக்கு உரிய உந்துதல் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும் என இந்திய தொழிலக வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.வி.கனோரியா தெரிவித்துள்ளார்.

0 Responses to இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com