Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய வளர்சிக்குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வரை அவமானப படுத்தி இருந்தால் அது கண்டனத்துக்கு உரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

'நானும் முதல்வராக இருந்த போது, தேசிய வளர்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். மாநில முதல்வர் பேச ஒதுக்கப் பட்ட நேரத்திற்கு கொஞ்சம் கூடுதலாகவே பேசினாலும், தவறில்லை என்பது போலத்தான் நானும் இதுவரை கண்டிருக்கிறேன். முதலில் பேச வேண்டிய உரைகளை தயாரிக்க சொல்லி வாங்கி வைத்துக் கொள்வார்கள். அதன் பின் பேச அனுமதி கிடைக்கும். உரைக்கான நேரம் கூடுதலாக இருந்தால் ரெக்கார்ட் செய்து தர சொல்லிவிடுவார்கள்.

ஆனால் அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, முதலமைச்சர்கள் கூடும் தேசிய வளர்சிக் குழுவில் தமிழக முதல்வரை அவமதிக்கும் படி அங்கு ஏதும் நடந்திருந்தால் அது கண்டனத்துக்கு உரியது' தான் என்று கூறியுள்ளார் கருணாநிதி. தமிழக முதல்வரைத் தொடர்ந்து, குஜராத் முதல்வர் மோடியும் தனக்கு 10 நிமிடங்கள் போதாது என்று வெளிநடப்பு செய்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 Response to தமிழக முதல்வரை அவமானப்படுத்தி இருந்தால் அது கண்டனத்துக்கு உரியது: கருணாநிதி

  1. Unknown Says:
  2. tamil nadu is joke

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com