Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”

என்ற பாரதிதாசனின் கூற்றுக்கு இணங்க, நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின் அருமையை எடுத்துரைத்து, தொடர்ந்தும் எமது மொழியை பின்பற்ற அவர்களை ஊக்குவிப்பதே எங்களுடைய இந்த போட்டியின் நோக்கமாகும்.

கற்க கசடற –  போட்டிகள் தென் கிழக்கு லண்டனில் நடைபெற்ற முதல் அரைசுற்றில் தொடங்கி, அதை தொடர்ந்து தென் மேற்கு , வட கிழக்கு , வட மேற்கு ஆகிய மூன்று இடங்களிலும் அரைச்சுற்று இடம்பெற்று, அதிலிருந்து தெரிவான போட்டியாளர்கள் மத்தியில் இடம்பெற்ற போட்டி இறுதி சுற்றாக lewisham Sivan Koyil மண்டபத்தில் இடம் பெற்றது.

இறுதி சுற்றி முடிவடைந்த நிலையில், போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, இனிதே நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் நடனம் , பாடல், பேச்சு ஆகிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

போட்டியாளர்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் நடுவர்கள் என அனைவரும் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். கலைநிகழ்வுகளின் இடையிடையே வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.

தமிழ் இளையோர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற, இந்த போட்டி முயற்சியை வந்திருந்த பெற்றோர்கள், நண்பர்கள், நடுவர்கள் என எல்லோரும் பாராட்டும் விதமாக ஊக்கப்படுத்தி அவர்களது மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தனர்.

” இதில் இருக்கும் சரி பிழைகளை கடந்து, உங்கள் முயற்சி எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது, உங்கள் முயற்சிகள் இன்னும் மேலும் வழர வேண்டும், வாழ்த்துக்கள்” என்று எமது நடுவர்களில் ஒருவரான திரு.ஆறுமுகம் அய்யா அவர்கள் தெரிவித்திருந்தார். பெற்றோர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்ததொடு, இது போன்ற நிகழ்வுகள் மேலும் வழர அறிவுரைகளையும் வழங்கி இருந்தனர்.

இவ்வாறாக, தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கிய இராச்சியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கற்க கசடற-௩ ன் போட்டிகளை தொடர்ந்து பரிசளிப்பு விழ இனிதே நடைபெற்றது.



0 Responses to “தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com