விழுப்புரத்தில் தமிழிளைஞர்
கூட்டமைப்பினர் தொடர்வண்டி நிலையம் அருகே நவம்பர் 27 மாவீரர் தினத்தை
அனுசரிக்கும் விதத்தில் மாவீரர் நாள் மற்றும் தமிழர் எழுச்சி நாள்
பொதுக்கூட்டம் நடை பெற்றது முன்னதாக சமர்ப்பா குழுவினரின் இன உணர்வு
பாடல்களுடன் நிகழ்ச்சி துவங்கியது பின்னர் கும்மிடிப்பூண்டி அம்பேத்கர்
தப்பாட்ட குழுவினரின் தமிழர்களின் மரபிசை தப்பாட்டம் நடைபெற்றது
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழீழப்போரின் விடுதலைக்காக தங்களின்
இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து தமிழர் தேசிய இயக்கத்தின்
பொதுச்செயலாளர் பரந்தாமன் ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு வீர வணக்கம்
செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பேசிய பரந்தாமன் தமிழீழ விடுதலை போர்
இன்னும் முடிய வில்லை அதனை தலைவர் பிரபாகரன் மீண்டும் முன்னெடுத்து
செல்வார்,அவர் உயிரோடு இருக்கிறார் இதை நான் யார் சொன்னாலும் நம்பமாட்டேன்
அய்யா பழ. நெடுமாறன் சொல்லியிருக்கிரார் அவர் பொய் சொல்ல மாட்டார் என பேசிய
போது கூட்டத்தில் எழுச்சி மிகுந்த கரவொலி எழுந்தது,
அதன் பின்னர் பேசிய
பேராசிரியர் செயராமன் ஒவ்வொரு இனத்திற்க்கும் பிறிந்து போகிற உரிமை
இருக்கிறது அது தமிழர்களுக்கும் இருக்கிறது இதை யாராலும் மறுக்க முடியாது
தடுக்கவும் முடியாது அது நிச்சயம் நடந்தே தீரும் தமீழம் மலர்வதை யாராலும்
தடுக்க முடியாது என பேசினார் கூட்டத்தில் ஏராளமான மகளிர் மற்றும்
உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.கூர்ரத்தில்
சங்கர்,மாலதி,செங்கொடி,முத்துக்குமார் ஆகியோரது படங்கள் வைக்கப்பட்டு
செங்காந்தள் மலர் தூவி பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
0 Responses to விழுப்புரத்தில் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது (படங்கள் இணைப்பு)