Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த சில வருடங்களாகப் புவியியலாளர்கள் துருவப் பகுதிகளில் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வொன்று மேற்கொண்டனர்.

இதன் மூலம் புவி வெப்ப அதிகரிப்புக் காரணமாக துருவப் பகுதிகளில் காணப்படும் பனிப்பாறைகள் உருகி கடந்த இரு தசாப்தங்களில் (20 வருடங்கள்) மட்டும் உலகம் முழுதும் கடல் நீர் மட்டம் 11 mm மில்லிமீற்றர் அதிகரித்துள்ளது என அவர்கள் கணித்துள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக சுமார் 20 துருவப் பகுதி ஆய்வாளர்களைக் கொண்டுள்ள குழுக்கள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட ஆய்வில் வட துருவத்துக்கு அண்மையில் உள்ள பெரும் நிலப்பரப்பான கிறீன்லாந்து மற்றும் தென் துருவமான அந்தாட்டிக்கா ஆகிய பிரதேசங்களில் உள்ள பனிப் படிமங்களின் (Ic sheets) தன்மை மற்றும் அளவு குறித்த திருத்தமான அளவீடுகளைப் பெறுவதற்கு முயன்று வருகின்றனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் கிடைத்த முடிவுகளில் பெரும்பான்மையானவை  உறுதியானதாகவோ அல்லது நம்பத்தகுந்ததாகவோ இல்லை என்பது துரதிர்ஷ்டமானது.

இந்நிலையில் நிகழ்காலத்தில் புவியியலாளர்கள் எதிர் நோக்கும் மிக அழுத்தமான கேள்விகளில் ஒன்றாக கடல் நீர் மட்டம் எந்தளவு மற்றும் எவ்வாறு அதிகரிக்கின்றது எனும் கேள்வி விளங்குகின்றது. துருவப் பகுதிகளில் உறைந்துள்ள பாரியளவான பனிக்கட்டிகள் உலகம் முழுதும் கடல் மட்டம் அதிகரிக்கத் தேவையான அடர்த்தி மிக்க கொள்வனவை உடையன. இவை மிகப் பெருமளவு உருகினால், சிறு சிறு தீவுகள் முழுமையாகக் கடலில் மூழ்கும் அபாயமும், உலக முழுதும் கடலோர நகரங்களும் அங்கு வாழும் சமூகங்களும் பாதிக்கப்படும் அபாயமும் தோன்றும்.

இதேவேளை துருவப் பகுதிகளிலும் கிறீன்லாந்திலும் உறைந்துள்ள பனிப்பாறைகளில் உருகும் நிலையிலுள்ள பனிப் படிமங்கள் (Ice sheets or Polar ice caps) எந்தளவு இருக்கின்றன என்பதைத் திருத்தமாகக் கணிப்பதற்கு காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு நடத்தும் செய்மதிகளுக்கே சவாலான விடயமாகும். இந்நிலையில் கிளேசியர் எனும் பனிச்சறுக்கு அனர்த்தம், பனிப்பாறைகளின் மேற்பரப்பு அவற்றின் மீதான ஈர்ப்பு விசைகளின் தாக்கம் மற்றும் பனிப்படிமங்களின் மாற்றம் என்பவை குறித்து ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா (Nasa) மற்றும் ஐரோப்பாவின் ஈசா (Esa) ஆகிய விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

0 Responses to துருவப் பகுதிகளில் பனிக்கட்டி உருகும் அளவைத் திருத்தமாக கணிக்கத் திணறி வரும் நிபுணர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com