Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று புதன்கிழமை ஜப்பானின் புதிய பிரதமராக ஷின்சோ அபே பதவியேற்றார். கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஷின்சோ அபேயின் ஜனநாயகக் கட்சி 480 இடங்களில் அமோக வெற்றி பெற்றதன் மூலம் கட்சியியின் தலைவரான அவர் முறைப்படி பிரதமராகப் பதவியேற்றார்.
இவருடன் சேர்ந்து மேலும் 7 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

அபே பதவியேற்ற பின் உரையாற்றுகையில், சீனாவுடனான தீவு உரிமைப் பிரச்சினை, சுனாமி நிவாரணம், மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய முக்கிய விவகாரங்களில் தீவிரமாகக் கவனம் செலுத்துவேன் என உறுதியளித்துள்ளார். ஷின்சோ அபே, கடந்த ஆறு வருடங்களில் 7 ஆவது முறையாகப் பதவியேற்றவர் ஆவார்.

அதாவது இவருக்கு முன்னர் மொத்தம் 6 பேர் ஏற்கனவே கடந்த ஆறு வருடங்களில் மாறி மாறி பதவி வகித்திருந்தனர்.இந்நிலையில் ஜப்பானில் ஆழமாக ஊடுருவியுள்ள பொருளாதார மற்றும் இராஜதந்திர சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலையில் அபே உள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஜப்பானின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்றுள்ள அபே தனது முதலாவது செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில், 'ஒரு உறுதியான பொருளாதாரமே ஜப்பானின் மிகப் பெரிய சக்தியாகும். மறுபடி ஒரு தடவை இந்த பொருளாதார உறுதிப்பாட்டைப் பெறாவிட்டால் ஜப்பானுக்கு ஒரு எதிர்காலமே கிடையாது.' என்று கூறினார்.

இவர் மேலும் கூறுகையில், ' நாம் நமது நாட்டில் கடினமாக உழைக்கும் பொது மக்களின் தேவைக்கேற்ப ஜப்பானை வளப் படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு சிறந்த எதிர்காலத்தைப் பெற முடியும்' என்றும் தெரிவித்தார்.

0 Responses to உறுதியான பொருளாதாரமே ஜப்பானின் மிகப்பெரிய சக்தி: ஜப்பானின் புதிய பிரதமர் அபே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com