கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களது விடுதலைக்காக போராடி
வருபவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலத்திற்கு, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு
விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவர் தற்போது நாட்டில் இல்லையென அவரது கட்சித்தரப்புக்கள் பதில் அளித்துள்ளன. ஏற்கனவே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் கஜேந்திரம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பின்னணியிலிருப்பதாக கூறும் அநாமதேய சுவரொட்டிகள் தெற்கு பல்கலைக்கழகங்களில் முளைத்திருக்கும் நிலையில் இந்த விசாரணை அழைப்பு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரி கனடாவின் ஸ்கார்புரூ ரிவர் நகர சபை தமிழ்மக்கள் சார்பில், டொரொண்டோ மாநகர சபை சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ, ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தன்னோடு மிக நெருங்கிய நட்பு கொண்டவர் என்ற வகையில் பான் கீ மூனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனது மாநகர தொகுதி மக்கள் தங்கள் உறவுகள் இலங்கை அரசின் கோரப்பிடிக்குள் சிக்கி தவிக்கும் பரிதாபத்தை கண்டு மனம் நொந்து போயிருப்பதாகவும், அங்கு மாணவர்களையும், அப்பாவி தமிழ் மக்களையும் இராணுவம் தொடர்ந்து அல்லற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத விசாரணை பிரிவினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் வி.புலிகளின் தலைவர் பிரபகாரன் குறித்து ஒரு கேள்வியும் எழுப்பவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பலாலி படைத்தளத்தில், யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினர், குறித்த மாணவரக்ளின் பெற்றோர், யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்கவை சந்தித்த போது,
"பிரபாகரன் இருக்கிறார்; தமிழீழம் கிடைக்கும் என்ற கொள்கைகளையே இன்னமும் அந்த நான்கு மாணவர்களும் பின்பற்றுகிறார்கள். அதனை அவர்களை மறக்கச் சொல்லுங்கள்; அப்படியானால். விரைவில் விடுதலையாவார்கள் என கூறியிருந்தார். இது குறித்து, நேற்று குறித்த மாணவர்களை சந்திக்க சென்ற பெற்றோர் அம்மாணவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதில் அளிக்கையிலேயே அவர்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.

0 Responses to யாழ்.பல்கலைக்கழக விவகாரம் : கஜேந்திரகுமாருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு