பள்ளி மாணவி புனிதா கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு
கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்வரும்
ஜனவரி 4ம் திகதி தமிழக அரசு இது குறித்து விரிவான விளக்க அறிக்கையை தாக்கல்
செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி அருகில் உள்ள கிராமத்தில் புனிதா என்கிற 12 வயது பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டர். இது குறித்த பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த பொது நல மனுவில் தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் பலாத்கார வன்கொடுமைகள், மற்றும் இதுத் தொடர்பான கொலைகள் நடந்து வருகின்றன. டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான போது, கொந்தளித்த மத்திய அரசும், மாநில அரசும், மக்களும் இங்கு விட்டேத்தியாக இருந்தது ஏன், என்று கேட்டும் தொடர்ந்து நடந்து வரும் இதுபோல சம்பவங்களுக்கு எப்படித்த இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது என்று தெரிய வேண்டும் என்றும் கேட்டு இருந்ததோடு, இது போன்ற வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வாசுகி, தமிழக அரசு இதுத் தொடர்பான விரிவான விளக்க அறிக்கையை வரும் 4 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இன்று திருப்பூர் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயதுப் பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அருகில் இருந்த பாக்குத் தோப்பில் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவலும் தற்போது வெளிவந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

0 Responses to பாலியல் பலாத்கார குற்றச்செயல்களுக்கு தமிழக அரசின் நடவடிக்கை என்ன?: சென்னை உயர் நீதிமன்றம்