Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இன்றைய பேரணியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். கொட்டும் மழையிலும் இனவாத சிங்கள அரசிற்கு எதிரான கோஷங்களுடன் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களும் இளையோர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை தடுத்து வைத்து கொண்டு இருக்கும் இலங்கை அரசின் மீது பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் குடுக்கவேண்டியும் எமது மண்மீட்பிற்காக இறந்த மாவீரர்களை நினைவு கூறுவதில் எந்த தவறும் இல்லை என்று பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இவ் ஊர்வலத்தில் வேற்றின மக்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் கிங்க்ஸ்டன் பல்கலைக்கழக விரிவுரையாளர் அவர்களும் கலந்து இலங்கை அரசிற்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர். நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டத்தில் இருக்கும் வேற்றின மக்கள் நிரம்பி வழிந்த லண்டன் மாநகரம் இவ் போராட்டத்தின் கோசங்களை கேட்டு செவிமடுத்தது மட்டுமில்லாமல் அதனை பற்றி வினாவி அறிந்துகொண்டார்கள்.

போராட்டத்தின் தொடராக வியாழக்கிழமை அன்று 18 பிரித்தானிய பல்கலைக்கழக தமிழ் ஒன்றியங்கள் கையொப்பமிட்ட மனு ஒன்று பிரித்தானிய பிரதமர் அவர்களின் காரியலத்தில் மாணவர்களால் ஒப்படைக்கப்பட்டது.










0 Responses to கொட்டும் மழையிலும் யாழ் பலகலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரி லண்டனில் இடம்பெற்ற மாபெரும் ஊர்வலம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com