Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் பல்கலைக்கழகமாணவர்கள் தாக்கப்பட்டதனைக் கண்டித்தும் அவர்களை விடுதலைசெய்யக்கோரியும் கனடிய  தமிழ்  இளையோர் அமைப்பால் முன்னெடுக்கபட்ட கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு.

 
டொரோண்டோ மாநகரில் அமைந்துள்ள அமெரிக்க துணை  துரவரலயம் முனப்பாக  கனடிய தமிழ்  இளையோர் அமைப்பினால்  யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்பாட்டம் இடம்பெற்றது. 
 
மாணவர் சமூகத்திற்கு எதிராக இலங்கை அரசும் அதன் இராணுவமும் செயற்படுத்தும் கொடுமைகளுக்கு எதிராக கோசங்கள் இட்டனர். , கடுங்குளிருடன் கூடிய காற்றையும் பொருட்படுத்தாமல் மாணவர்களும் மக்களும் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர் 
 
கனடிய பல்கலை  கழகங்களில்  நடைபெற்ற கவனயீர்ப்பு போராடங்களை தொடந்து கனடிய தமிழ் இளையோர் அமைப்பு மக்களை ஒன்று படுத்தி இப்பபோரடத்தை முன்னெடுத்தது 
 
மக்களின் சனநாயக ரீதியான உரிமைப் போராட்டங்களை இலங்கை அரசு ஆயுதப்படைகொண்டு நசுக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும், அங்குள்ள தமிழ்மக்கள் இவற்றை முறையிடுவதற்கு பொருத்தமான யாரும் இல்லாத நிலையில் அந்தமக்கள் சர்வதேசத்தின் உதவியை நாடி நிற்பதை ஆழமாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
 

0 Responses to கனடிய தமிழ் இளையோர் அமைப்பால் முன்னெடுக்கபட்ட கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com