கடந்த வெள்ளிக்கிழமை (07) அன்று சிறீலங்கா பாராளுமன்றத்தில் இடம்பெற்ற
2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதுடன் பாதுகாப்பு அமைச்சு மீதான
குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட சம்பந்தன் புத்தி பிசகிய நிலையில்
உளறிக்கொட்டினார்.
அவர் அன்று பாராளுமன்றத்தில் கூறிய கருத்துக்களின் மூலமாக தமிழ் மக்களுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது? இதனால் உண்மையில் நன்மை அடையப்போகிறவர்கள் யார்? எவரைத் திருப்தியடைய சம்பந்தன் அவர்கள் அன்று பாராளுமன்றத்தில் தமிழின விரோதக் கருத்துக்களைக் கூறினார்?
சில மாதங்களுக்கு முன் வட,கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகப் பிரதேசங்களாக நாங்கள் கோரவில்லை என்றார் சம்பந்தன், சிங்கள அரசிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதற்கு மறுத்து ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில்லை என்று முடிவு எடுத்தார், மே தினத்தில் சிங்களக் கொடியை ஏந்தி நின்றார்.
இன்று தமிழர்களின் போராட்டம் பயங்கரவாதம் என்று கூறுகிறார் சம்பந்தன், அதாவது சிங்களப் பேரினவாதத்தைப் போன்று தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து முத்திரை குத்தியுள்ளார் சம்பந்தன்.
சிங்கள அரசு தொடுத்த போரானது தமிழினத்திற்கு எதிரான போர் அல்ல அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர், என்று பல பொய்ப் பிரச்சாரங்களை செய்து கொண்டுவரும் சிங்கள அரசிற்கு வலுசேர்த்திருக்கிறார் சம்பந்தன் அவர்கள், இவர் கூறிய கருத்துகளை அடிப்படையாக வைத்து பல வகையில் சிங்கள அரசு தனது செயல்பாடுகளை நியாயப்படுத்தியும், சர்வதேசத்தின் அழுத்தங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் அது பயன்படுத்திக்கொள்ளும், இவர் கூறிய கருத்துக்களால் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் விளைவுகள் பாரதூரமாகவே அமையப்போகிறது. தமிழர் தாயகப் பிரதேசங்களில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள், இராணுவமயமாக்கல், சிங்கள மயமாக்கல், பௌத்தமயமாக்கல் போன்ற சிங்கள அரசின் செயல்பாடுகளை நியாயப்படுத்த வலுசேர்த்திருக்கிறார் சம்பந்தன் அவர்கள். சற்றும் சிந்திக்காமல் மிகப்பெரிய வரலாற்றுத் தவறை செய்திருக்கிறார் சம்பந்தன் அவர்கள், இது மன்னிக்கமுடியாத குற்றமாகும்.
மடிந்த மாவீரர்களைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கும் சம்பந்தன் அவர்கள் எப்படி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கப்போகிறார்?. 60 ஆண்டுகால சிங்களப் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தி உண்மையான பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடிய தமிழர்களின் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று கூறியிருக்கிறார் சம்பந்தன், தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவத்தை அகற்றிக்கொள்ளவதற்கு தான் கோரவில்லை என்றும் கூறியிருக்கிறார். உண்மையில் த்மிழர்களின் பிரதிநிதியாக சம்பந்தன் அவர்கள் செயல்படவில்லை என்பதையே இது தெளிவாகக்காட்டுகிறது.
புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறும் சம்பந்தன் அவர்கள் அன்று எதற்கு அவர்களைச் சந்தித்து உரையாடி, விருந்தும் உண்டு, தமிழ்த் தேசியத்தலைவர் அவர்களை தம்பி என்று அழைத்தார். சம்பந்தன் இன்று துரோகிகள் போலவே உறவாடி முதுகில் குத்துகிறார், அண்மையில் ஊடகங்களுக்கு ஒரு கருத்தைக் கூறினார் சம்பந்தன், அதாவது தர்மம் வெல்லும் என்றார். உறவாடி முதுகில் குத்துவதற்கும், மனச்சாட்சியில்லாமல் நடந்துகொள்வதற்கும் பெயரா தர்மம்? சம்பந்தன் அவர்கள் புலிகள் பயங்கரவாதிகள் என்று பாராளுமன்றத்தில் கூறிய தமிழின விரோதக் கருத்துக்களை தேர்தலின் போது தமிழ் மக்கள் முன் கூறித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறாரா? அவருக்கு முதுகெலும்பு இருந்தால் அதனைச் செய்வாரா? உண்மையில் அவர் நேர்மையான மனிதர் என்றால் அதனைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறாரா? தமிழ் மக்களிடம் தமிழீழப் போராட்டத்தை வைத்து வாக்குப் பிச்சை வாங்கி பாராளுமன்றத்திற்குச் சென்றவர் இன்று கூச்சமில்லாமல் கூறுகிறார் பயங்கரவாதம் என்று.
சம்பந்தன் ஆற்றிய உரை தொடர்பில் சிங்களப் பேரினவாதிகள் தங்களின் மகிழ்ச்சியை அள்ளிக்கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக நிமால் சிறிபால டி சில்வா கூறுகையில் கூட்டமைப்பினர் இனவாத நிலைப்பாடுகளில் இருந்து மாறியுள்ளார்கள் என்றும் புலிகள் இருந்த போது கூட்டமைப்பினர் இவ்வாறு சுதந்திரமாகப் பேச முடியாதவர்களாக இருந்தார்கள் என்றும். ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் புண்ணியம் கிடைக்க கூட்டமைப்பினர் தற்போது சுதந்திரமாகப் பேசுகின்றனர். என்று கூறுகிறார் சிங்களப் பேரினவாத அமைச்சர்.
சம்பந்தன் அன்று பாராளுமன்றத்தில் தனது நண்பரான கதிர்காமரையும் மற்றும் சிலரையும் கொன்றார்கள் புலிகள் என்றார். தமிழினத்திற்கு கதிர்காமர் செய்த நன்மை ஒன்றை சம்பந்தன் அவர்கள் கூறுவாரா? அமைச்சுப் பதவிக்காகவும், சுகபோக வாழக்கைக்காகவும் சிங்களப் பயங்கரவாதத்தை மறைத்து தமிழர்களின் போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டம் என்று உலகமெங்கும் கொண்டுசென்று தூற்றித்திருந்தவர் கதிர்காமர், அதனால் பல நாடுகள் புலிகளுக்குத் தடை விதித்தது, கதிர்காமரின் நாமத்தைக் கூறியும் தமிழரின் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று கூறும் சம்பந்தன் அவர்கள் எப்படி தமிழ் மக்களுக்காக இதயசுத்தியுடன் செயல்பட்டிருப்பார்? இனியும் இதயசுத்தியுடன் செயல்படுவார் என்று எப்படி தமிழ் மக்கள் நம்புவார்கள்? தமிழர்களினால் நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தின் நியாயங்களை சம்பந்தன் அவர்கள் சர்வதேசத்திடம் எடுத்துக் கூறியிருப்பாரா? இவர் அவற்றை எடுத்துக் கூறியிருக்கமாட்டார் அதனால் தான் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை சில நாடுகள் பயங்கரவாதமாகத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கின்றன.
இவர்கள் தமிழரின் ஆயுதப்போராட்டத்தை நியாயப்படுத்தியும், உண்மையான சிங்களப் பயங்கரவாதத்தைப் பற்றியும் இராஜதந்திர ரீதியாகவும், சரியான முறையில் சர்வதேசத்திடம் கொண்டு சென்றிருந்தால் தமிழினம் அழிக்கப்பட்டிருக்காது. ஆனால் இவ்விடயத்தில் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் அரசியல்வாதிகள் போல நடந்துகொள்ளவில்லை.
சிங்கள அரசு செய்த போர்க்குற்றங்களையும், மனிதவுரிமை மீறல்களையும் கூறுவதற்கு ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதவுரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் செல்ல மறுத்தவர் சம்பந்தன். இன்று புலிகள் மனிதவுரிமை மீறல்களைச் செய்தார்கள். அவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறுகிறார், கொடூரமான முறையில் குழந்தைகள், பெண்கள் என்று லட்சக்கணக்கான தனது இனமக்களை அழித்த சிங்களப் படையினரைப் பயங்கரவாதிகள் என்று கூறமுடியாதவர் சம்பந்தன். சிங்களப் பேரினவாதிகளுக்கு நீங்கள் அள்ளிப் பணத்தைக் கொட்டினாலும் தனது இனத்தைக் காட்டிக்கொடுக்கமாட்டார்கள், அப்படியொருவரை இதுவரைக்கும் நீங்கள் கண்டதுண்டா? ஆனால் நமது இனத்தில், நம்மைக் காட்டிக்கொடுப்பதற்குப் புதிதாக உருவாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
சம்பந்தன் அவர்கள் அரசியலில் இருந்து ஒய்வுபெறவேண்டும், அல்லது கூட்டமைப்பினர் அவருக்கு ஒய்வைக் கொடுக்கவேண்டும், சம்பந்தன் அவர்களின் முட்டாள் தனமான செயல்பாடுகளினால் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்ப்படும் நிலை உருவாகியுள்ளது. சிந்திக்காமல் உளறுவதும், முரண்பாடான பேச்சுகளும், அரசியல் இராஜதந்திரம் தெரியாமலும், தன்னிச்சையான முடிவுகள் எடுப்பதும் போன்ற செயல்பாடுகளினால் அவர் தொடர்ந்து கூட்டமைப்பிற்கும், தமிழ் மக்களுக்கும் தலைவராக இருப்பதற்குத் தகுதியை இழந்துவிட்டார், சிறீலங்கா பாராளுமன்றத்தில் அவர் கூறிய கருத்துக்களின் மூலமாக தமிழர்களின் உரிமையைப் பற்றிப் பேசவோ அல்லது தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவோ மற்றும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருப்பதற்கோ அவருக்கு இருந்த தகுதியை இழந்துவிட்டார். சம்பந்தன் அவர் கூறிய கருத்துக்களைச் சிறிய விடயமாகக் கருதிவிட முடியாது இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும் அவர் அப்பதவியில் இருப்பது தமிழருக்கு ஆபத்தைத் தரும். கூட்டமைப்பு, சம்பந்தனின் கையில் இருப்பது இருண்ட எதிர்காலத்தை நோக்கி தமிழ் மக்களைக் கொண்டு செல்லும்.
தாயகத்திலிருந்து துடிக்கும் ஓர் குரல்.

சம்பந்தனைப் போன்ற ஈனத் தமிழர்களினால் தான் அறுபது வருடங்களாக தமிழர் தீராத துயர் சுமக்கின்றனர். தமது சுயநலன்களுக்காக அபிலாஷைகளக்காக தன் இனத்தையே விற்று உண்ண ஆயத்தமாகி விட்டார்கள் இந்த தமிழ் அரசியல் அசிங்கங்கள். இவர்கள் சிங்கள பயங்கரவாத அரரை விட ஆபத்தானவர்கள். இன்று உலகம் எம்பக்கம் பார்வையைச் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில் இவரது இந்த பேச்சு எம்மை மறுபடியும் பாதாளத்தில் விழச் செய்யும். ஈன புத்தி படைத்த இந்த அரசியல்வாதிகளை இனியும் நம்பி ஏமாந்தது போதும்.
sampanthan betrayed tamils.he has been cheating tamils for a long period.he was behind the murder of our up coming politician.once again he fooled the tamils.now he is trying to fill his gap with n.vithiyatharan(uthayan)vithiyatharan is another suitable persoon to fool the entire tamils.
do you know that santhirika's government gifted him a bullet proof car.he is more faithful to government than tamils.