Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்கள இராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மாவீரர் தினத்தையொட்டி நவம்பர் 27-ம் தேதி வீர வணக்கத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை சிங்கள இராணுவத்தினர் தாக்கியுள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.

கார்த்திகை நாளையொட்டி முருக வழிபாடு நடத்தும் தமிழர் வீடுகளில் ஏற்றப்பட்ட தீபங்களை இராணுவத்தினர் எட்டி உதைத்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு அமெரிக்கத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு என் கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் இனத்தையே அழித்துவிடலாம் என்ற மூர்க்கத்தனமான வெறியோடு சிங்கள இராணுவத்தினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக மக்களைக் காக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கையில் தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது! வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com