Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதைக் கண்டித்து, டெல்லி குடியரசு தலைவர் மாளிகை முன் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அந்த வன்முறையில் காயமடைந்த போலீசார் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அவரது குடும்பத்தார் போராட்டக் காரர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று மனமுருகி கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தியா கேட் அருகே கடந்த வாரம் புதன் அன்று நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அதில் காவல்துறைக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு கலவரத்தில் முடிந்தது. காவலர்கள் உட்பட 140 பேர் காயமடைந்தனர். நான்கு காவலர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சுபாஷ் என்கிற காவலர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இறந்த காவலரின் குடும்பத்தார், போராட்டக்காரர்கள் வன்முறையைக்  கைவிடவேண்டும் என்று உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விபரம் வீடியோ ஆதாரங்கள் மூலம் பெறப்படும் எஅன்வும், பொலிஸாரை காயப்படுத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிடவேண்டும்: உயிரிழந்த காவலரின் குடும்பம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com