தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து யேர்மனியில் வாழும் 6000 க்கு மேற்பட்ட
தமிழ் மாணவர்களுக்குத் தமது தமிழாலயம் என்ற பள்ளிகள் ஊடாகத் தமிழ்
மொழியையும் தமிழர் பண்பாடுகளையும் 23 ஆண்டுகளாகக் கற்பித்துவரும் தமிழ்க்
கல்விக் கழகம் ஆண்டுதோறும் நாடு தழுவிய மட்டத்தில் தமிழ்த் திறன்போட்டிகளை
நடாத்திவருகின்றது.
அந்தவகையில் இவ்வாண்டுக்கான தமிழாலய
மட்டத்திலான தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெற்று அங்கே தெரிவான
மாணவர்களுக்கான இரண்டாம் நிலையான மாநில மட்டத்திலான போட்டிகள் 15.12.2012
சனிக்கிழமை யேர்மனி முழுவதும் ஒரே நேரத்தில் ஆறு நகரங்களில் நடைபெற்றன.
காலநிலை சீரற்ற கடுமையான பனிக்குளிரையும் பொருட்படுத்தாது 1735 மாணவர்கள் 39 க்கு மேற்பட்ட வெவ்வேறு போட்டிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.போட்டிகளை நடுவம் செய்வதற்காகத் தமிழ்த்திறன் பிரிவினால் விசேட பயிற்சி வழங்கப்பட்ட 180 ஆசிரியர்கள் ஆறு நிலையங்களிலும் செயலாற்றினார்கள்.
காலநிலை சீரற்ற கடுமையான பனிக்குளிரையும் பொருட்படுத்தாது 1735 மாணவர்கள் 39 க்கு மேற்பட்ட வெவ்வேறு போட்டிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.போட்டிகளை நடுவம் செய்வதற்காகத் தமிழ்த்திறன் பிரிவினால் விசேட பயிற்சி வழங்கப்பட்ட 180 ஆசிரியர்கள் ஆறு நிலையங்களிலும் செயலாற்றினார்கள்.
கம் நகரத்தில் நடைபெற்ற போட்டிகளைத்
தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செ.லோகன் அவர்களுடன் இணைந்து
அந்த நகரத்தின் நகரமுதல்வர் அவர்களும் ஆரம்பித்துவைத்தார். கம் நகரத்தின்
நகரமுதல்வரல் சிறப்புரையாற்றுகையில் தமிழ்ச் சமூகத்தின் இப்படியான ஆற்றல்
மிக்க செயற்பாடுகளினால் தனது நாடு பெருமைகொள்வதாக வாழ்த்தினார். தமிழர்கள்
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமது தாய்மொழியையும் யேர்மன் மொழியையும்
சரியாகப் படித்து நல்ல பண்பான புதிய சமூகமாக வளர்ந்துவருவது
போற்றுதற்குரியதென்றார்.
அதேபோன்று ஆலன் நகரத்தின் நிகழ்வுகளைத்
தமிழ்த்திறன் பிரிவின் பொறுப்பாளர் திரு.இரா.மனோகரன் அவர்களுடன் அந்த
நகரத்தின் நகரமுதல்வர் அவர்களும் இணைந்து ஆரம்பித்துவைத்தார். ஆலன்
நகரத்தின் முதல்வர் உரையாற்றும் போது தமிழர்கள் தனது நகரத்தில் வாழ்வதால்
தனது நகரம் பெருமைகொள்வதாகக்குறிப்பிட்டு மகிழ்ந்தார். இரு நகரங்களின்
யேர்மனியப் பத்திரிகை நிருபர்கள் போட்டிகள் பற்றித் தமது பத்திரிகைகளில்
சிறப்பான தொகுப்புக்களை வெளியிட்டனர்.
மாநில மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில்
முதல் மூன்று நிலைகளிலும் வெற்றிபெற்ற மாணவர்கள் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில்
நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்வார்கள். இறுதிப்போட்டிகளில்
வெற்றிபெறுவோருக்கு ஏப்பிரல் மாதம் நடைபெறும் தமிழ்க் கல்விக் கழகத்தின்
ஆண்டுவிழாவில் பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கவுள்ளனர்.




























0 Responses to யேர்மனியில் தமிழ்கல்விக்கழகத்தினால் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டி நிகழ்வு (படங்கள் இணைப்பு)