Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று மலேசியா கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 2 வது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கலந்துகொள்கின்றது .



60 ஆண்டுகளுக்கும் மேலாக  ஈழத்தமிழர்கள்  மீது சிங்கள  அரசு  முன்னெடுத்துவரும் இனவழிப்பை அனைத்துலக ரீதியாக வெளிப்படுத்தி , சிங்கள அரசின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிகையின் அடிப்படையில் உள்நாட்டு விசாரணையை   முற்றாக நிராகரித்து,  இனவழிப்பு புரிந்த சிங்கள அரசுக்கு எதிரான அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையிலும் , ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்காக கொல்லப்பட்டபோது  தெரிந்தும் அதை தடுத்து நிறுத்த தவறிழைத்த ஐநா வை கண்டித்தும் அத்தோடு  ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு  தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தம்மை தாமே ஆளும் வகையல் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை இவ் மாநாட்டில் கலந்துகொள்கின்றது .ஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே   உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் .







இன்று நடைபெறும் முக்கிய மாநாட்டின் முன்னேற்பாடாக நேற்று மாலை பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளர்கள் மற்றும் தமிழர் பிரதிநிதிகள் கலந்துரையாடல் இடம்பெற்றது .

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை என்பது 11   நாடுகள் வாரியான மக்கள் அவையை பிரநித்துவப்படுத்தும் வகையில் அமைகின்றது .

தகவல்
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை
www.iceelamtamils.com

0 Responses to ஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com