Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தலைவராக கருதப்படும் அபு ஜுந்தால் அண்மையில் சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்.

எனினும் இவர் இந்தியாவின் இரகசிய ஏஜெண்டுக்களில் ஒருவர் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறியிருப்பது, இந்திய மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

'அபு ஜுந்தால் இந்திய புலனாய்வு ஏஜென்ஸியை சேர்ந்தவர். அப்படி அவரே தான் கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு' என்கிறார் ரெஹ்மான் மாலிக்.  2008இல் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதல் திட்டத்தை, பாகிஸ்தானிலிருந்து அபு ஜிந்தாலே வழிநடத்தினான் என இந்திய தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

சவுதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்ட அபுஜிந்தால் இந்தியாவின் அழுத்தத்தை அடுத்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். தற்போது இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரெஹ்மான் மாலிக், அபு ஜிந்தால் விவகாரம் குறித்து மேலும் கூறுகையில், ஜுந்தாலை தவிர்த்து, மேலும் இரு இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார்கள்.  அவர்கள் ஏன் பாகிஸ்தானுக்கு சென்றார்கள் என்பதில் எமக்கு குழப்பம் நிலவுகிறது என்கிறார்.  ஜுந்தாலின் போலி பாகிஸ்தான் அடையாள அட்டை, போலி கடவுச்சீட்டு என்பவையும், அவனது உடமையகளாக மீட்கப்பட்டிருந்ததாக அவர் கூறுகிறார். மேலும்,

'இந்தியா - பாகிஸ்தான் எதிரிகள் எனும் மனப்பாங்கை மறப்போம். நாங்கள் 26/11 தாக்குதலை மறந்து விடவில்லை. உங்களையும் மறந்துவிடும் படி கூறவில்லை. எனினும், அதில் உழலும் குரோத மனப்பான்மையையே மறக்க சொல்கிறொம். பிரகாசமான புதிய வெளியொன்றை உருவாக்குவோம்'  என கூறியுள்ளார்.

0 Responses to அபு ஜுந்தால் இந்திய ஏஜெண்ட் என்கிறார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com