Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று டிசம்பர் 3ம் திகதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

 தமிழக முதல்வர இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  இந்நாளில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் தன்னம்பிக்கையும், சம வாய்ப்புகளும் பெற்று சமூகத்தில் உயர வேண்டும்.

அதற்காக அவர்களுக்கு இலவச மூன்று சக்கர வாகனம், சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 12,ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப், தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவித இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பல்வேறு சிறப்பான திட்டங்கள், நாட்டுக்கே முன் மாதிரியாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்துக்கான அனைத்து உதவிகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி அவர்களை சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக நலமோடும், வளமோடும் வாழ அரசு தொடர்ந்து பாடுபடும் என்றார்.

0 Responses to சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் : முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com