Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


வட தமிழீழத்தில் இலங்கை அரசாங்கத்தினால் ஒரு நிழல்யுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் சமகாலத்தில் உணர்ந்திருக்கின்றோம்.

பயங்கரவாதமே இல்லாத தேசத்தில் அதிகளவு இராணுவம் எதற்காக என நாம் கேட்டுக் கொண்ட கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கம் சரியான பதிலை கொடுத்திருக்காத நிலையில் நாமாகே பதிலை இப்போது உணர்ந்து கொள்கின்றோம்.

 கடந்த 27ம்திகதிக்குப்பின்னர்வடக்கில்கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இரு மாவட்டங்களில் மாத்திரம் 45 பொதுமக்கள் விசாரணைக்கென கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

 யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் விசாரணைக்கென கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இவையனைத்தும் நாங்கள் அறிந்த தகவல்கள். ஆனால் நாங்கள் அறியாமல் பல கைதுச் சம்பவங்களும், அச்சுறுத்தல்களும் இங்கு நடைபெற்றிருக்கின்றன.

அதேபோல் கைது செய்யப்பட்டவர்கள், விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கிருக்கின்றார்கள்? அவர்கள் மீதான விசாரணைகள் எந்தக் கட்டத்திலிருக்கின்றன? என்ற கேள்விகளுக்கு கைதுசெய்யப்பட் டவர்களின் குடும்பத்தினருக்கும் கூட பதில் கிடைக்கவில்லை.

 கைது செய்யப்படுபவர்கள் பலர் விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்டு பின்னர் நேரடியாகவே புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றார்கள்.
 உதாரணத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் விசாரணைகளுக்காகவென அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் புனர்வாழ்வு முகாம்களக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

அதேபோல் பல பொதுமக்களுக்கும் நடந்திருக்கின்றது. இதுஒருபுறமிருக்கமறுபுறத்தில்யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பதற்கான சந்திப்பில் மிகவும் காட்டமாக பேசியிருக்கின்றார்.
அதாவது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரிகேடியர் தரத்திலானவர்கள் எனவும், அவர்களுக்கு தற்போதும் புலம்பெயர்நாடுகளிலுள்ள புலிகளுடன் தொடர்புகள் இருப்பதாகவும் அவர் மிதப்போடு கூறியிருக்கின்றார்.

அவருடைய நிலைப்பாடு அவருடைய கருத்துக்கள் அனைத்தையும் தமிழர்கள் உள்மனதில் சேமதித்து வைப்பார்கள் என்று.
ஆனால் அவர் ஒரு உண்மையினை உணர்ந்து கொள்ள வேண்டும்.விடுதலைப்புலிகளை இலங்கை இராணுவம் எமக்கு அடையாளப்படுத்தவில்லை. புலிகள் மக்களோடு இருந்தார்கள் மக்களிடமிருந்து பிறந்தார்கள். எமக்கு தெரியும். யார் புலிகள், யார் பிரிகேடியர் என்பது. அதேபோல் சர்வதேசத்திற்கும் இந்த உண்மைகள் புரியாமலில்லை.

 இதனை இராணுவத்தளபதி முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இங்கே மாணவர்கள் கைதுசெய்யப்பட்டது தொடர்பாகவும், பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டது தொடர்பாகவும் அறிவுறுத்தல்களை தர நாம் முனையவில்லை.

ஒட்டுமொத்தமாக நாம் ஒரு விடயத்தை கூர்ந்து அவதானிக்கவேண்டிய வரலாற்றின் தவிர்க்க முடியாதவொரு கட்டத்தில் நாங்கள் நின்று கொண்டிருக்கின்றோம் என்பதை முதலில் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த விடயம் என்னவென்றால் மாணவர்களினதும், பொதுமக்களினதும் கைது என்பதற்கும் அப்பால் வடகிழக்கு தமிழர்தாயகப்பகுதியில் கல்விச் சமுகத்தின் மீது, வைத்திய சமுகத்தின் மீது, வர்த்தகச முகத்தின் மீது, தொழிலாளர் சமுகத்தின் மீது, எங்கள் வாழ்நிலங்களின் மீது சிங்கள பேரினவாதசக்திகளினால் சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சுமை என்பது மிகப்பெரியது.

 சுருக்கமாகச்சொல்லப்போனால், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது இதே சிங்கள பேரினவாதசக்திகள் எந்தக் கோணத்தில் நடந்து கொண்டிருந்தனவோ அந்தக் கோணத்தில் மீளவும் நடந்துகொண்டிருக்கின்றது என்தே அந்த விடயம்.

தமிழினத்தை சகலவழிகளிலும் வேரறுத்து விடுவதற்கு, சிங்கள, முஸ்லிம் கூட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.இந்தக் கூட்டு ஒரு இனத்தை முற்றாக அழிப்பதற்குச் செய்யவேண்டிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதாவது ஒரு இனத்தை அழிப்பதற்கு முதலில் அந்த இனத்திற்குரிய வாழ் நிலத்தை சிதைக்கவேண்டும், கலை,கலாச்சாரங்களை சிதைக்க வேண்டும், பொருளாதாரத்தை சிதைக்கவேண்டும், கல்வியை சிதைக்கவேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேல் அந்த இனத்தின் மொழியை சிதைக்கவேண்டும். இந்த நடவடிக்கைகள் யாவும் தமிழர் தாயப் பிரதேசத்தில் மிகவும் உச்சக்கட்ட வேகத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டுக்கொண்டிருப்பதை நாங்கள் சமகாலத்தில் அவதானிக்கலாம்.

எனவே இந்த நடவடிக்கைளின் ஒரு கட்டமாகவே பல்கலைக்கழக மாணவர்களுடையகைதும், பொதுமக்களுடைய கைதும் அமைகின்றது.
இந்த இடத்தில்யாழ்.பாதுகாப்புபடைகளின் கட்டளைத்தளபதி அரசாங்கமும், அதன் இராணுவ இயந்திரமும் செய்துகொண்டிருக்கும் அனைத்து விடயங்களையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

அதற்காக வெறும் அர்த்தமில்லாத, குழந்தைப்பிள்ளைத் தனமான கதைகளையும் அவர் கூறத் தலைப்பட்டிருக்கின்றார்.ஆனால் இதனையொரு பெரியவிடயமாக ஊடகங்கள் காட்டிக் கொள்வது ஏற்புடையதல்ல.அவர் கூறும் கருத்துக்களிலுள்ள அர்த்த மற்ற தன்மையினை தமிழர்களும், சர்வதேசமும் உணராமல்இல்லை.

 அதைமேலேயும்குறிப்பிட்டிருந்தோம். எனவே அவருடைய அந்தக் கருத்துருவாக்கத்தை முற்று முழுதாக ஏளனம் செய்யும் வகைளில் ஊடகங்கள் நடந்துகொள்வதே இங்கு பொருத்தமானதாக அமையும் என நான் நினைக்கின்றேன்.

ஆனால் ஒரு வேளை அது ஊடக நிலைப்பாடுகளுக்குப் பொருத்த மற்றதாக இருக்கலாம்.யாழ்.பல்கலைக்கழகத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு இராணுவம் பகீரத பிரயத்தனம் எடுத்திருக்கின்றது. ஆனால் மாணவர்களுடைய விடுதலையினை வலியுறுத்தி பல்கலைக்கழகம் மீள ஆரம்பிக்கப்படப் போவதில்லை என மாணவர்களும், பல்கலைக்கழக நிர்வாகமும் தெரிவித்திருக்கின்றது.

இந்த இடத்தில் மாணவர்களுடைய கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக கரிசனையினை தூக்கிக்கொண்டு சிலர் அலைந்துதிரிகின்றார்கள்.ஆனால் அவர்கள் ஒரு விடயத்தை முக்கியமாக அவதானிக்கவேண்டும்.

அதாவது யாழ்.பல்கலைக்கழகம் என்பது 1985ம்ஆண்டிற்கு முன்னரும், 2000ம் ஆண்டிற்குப் பின்னரும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றியிருந்த பங்களிப்பென்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதவையாகும்.
மாணவர்களின் கல்விபாதிக்கப்படுவதாக கூறுபவர்கள் இன்று புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டிருக்கும் நான்கு மாணவர்களினதும் உணர்வுகளை உதாசீனம் செய்கிறார்கள்.

எனவே முழுமையாக நாம் இந்த அனைத்துச் சம்பவங்களிலுமிருந்து எடுத்துக்கொள்ளக் கூடிய விடயமென்னவென்றால், ஒருங்கணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு ஒருபோதும் உறுதியானதொரு தீர்வு கிடைக்கப்போவதில்லை.

அதேபோல் 2009ம்ஆண்டின்பின்னர்கடந்த 3 வருடங்களில் விடுதலைப்போராட்டமொன்றின் தேவையினை தமிழர்கள் மிக உன்னிப்பாக உணரத் தொடங்கியிருக்கின்றார்கள்.இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விடயம், ஆயுதப்போராட்டத்தைப் போன்று இனவிடுதலைப்போராட்டத்தினை மிக உச்ச கதியில், அதே கட்டுப்பாட்டுடனும், இறுக்கத்துடனும் கொண்டு செல்லக்கூடிய போராட்டமொன்று நிச்சமாக துளிர்விடப் போகின்றது.

இதனை தலைமையேற்று கொண்டுசெல்பவர்கள் நிச்சயமாக இளைஞர்களாக இருப்பார்கள் அந்த சக்தி பல மிதவாதிகளின் போலி முகத்திரைகளை கிழிக்கும்.
 தாயகத்திலிருந்து,

 (நிலவன்)

1 Response to வட தமிழீழத்தில் இலங்கை அரசால் நிழல் யுத்தம் ஆரம்பம்!

  1. அனைத்து அழிவுகளையும் தமிழன் உண்ணிப்பாக மௌனமாக அவதானித்து வருகின்றான். அவனது மௌனம் சிங்கள பயங்கரவாத அரசால் நையாணடியாக புரிந்துள்ளது. அவனது மௌனம் உடையும் போது அங்கு எம் இளவல்களால் புதிய நாடோன்று தோன்றியிருக்கும். அப்போது ஆயுதங்களின் தமிழர்களின் மௌனத்தின் வீரியம் உலகிற்கும் பயங்கர வாத அரசிற்கும் புரியும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com