பாலியல் பலாத்கார குற்றத்துக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்
தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓடும் பஸ்ஸில் டெல்லி மாணவி பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. இதன் விளைவாக டெல்லியின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்தன.
இக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.
இதையடுத்து கடந்த டிச.23ம் திகதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் உயர் மட்ட குழுவின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்து சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, பாலியல் பலாத்கார தொடர்பான வழக்குகளை 90 நாட்டுகளுக்குள் விசாரித்து தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற ரேணுகா சவுத்ரி, வெளிநாடுகளில் உள்ளதுபோல் கற்பழிப்பு குற்றவாளிகளின் ஆணுறுப்பை ரசாயனம் செலுத்தி செயலிழக்க வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவன் 18 வயதையடைய சில மாதங்களே உள்ள நிலையில் இச்செயலில் ஈடுபட்டுள்ளான். இதனையும் கருத்தில் கொண்டு விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில், 18 வயதுக்குட்பட்ட குற்றவாளிகள் இளம்சிறார் காப்பகத்துக்கு தண்டனைக்காக அனுப்பப்படுவதை தவிர்க்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 18 வயது நிறைவடையாதவர்கள் இளம் குற்றவாளிகள் என்ற தற்போதைய சட்ட நடைமுறையை திருத்தி 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பெரியவர்களுக்கு வழங்குவதுபோல் சம தண்டனை வழங்கவும் விவாதிக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் நல வாயிலாக மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்ற பின், இதற்கென அமைக்கப்பட்டுள்ள வர்மா கமிஷனின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் சட்டமாக நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த போராட்டத்தில், போலீசார் மீது கல்வீச்சு நடத்திய குற்றச்சாட்டில் ஐந்து ஆர்ப்பாட்ட காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பகல் 1 மணியளவில் இந்த கூட்டத்திற்குள் புகுந்த அரசியல் பின்னணி கொண்ட சுமார் 50 பேர் போலீசார் அமைத்துள்ள தடுப்புவேலிகளை உடைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முயன்றதாகவும் இதனால், போலீசாருக்கும் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படிகிறது.
144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் இதுபோல் கூட்டமாக வருவது சட்டவிரோதம் என்று கூறி போலீசார் எச்சரித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பதற்றம் நீடித்தது. அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், போலீசார் மீது கல் வீசி தாக்கினார்கள்.
இதனிடையே, இந்தியா கேட் பகுதியை நோக்கி முன்னேற முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், இன்னும் சிலரை சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில் போலீசார் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்த மாணவிக்கு பொதுமக்கள் அஞ்சலி
Delhi gang-rape case

0 Responses to பாலியல் பலாத்கார குற்றத்துக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுமா?