சர்ச்சைக்குரிய சென்காக்கு தீவுகளை சீனாவுக்கு ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது என ஜப்பானின் புதிய பிரதமர் அபே அறிவித்துள்ளார்.
ஜப்பானின் ஜனநாயக விடுதலைக் கட்சியின் தலைவரான ஷின்சோ அபே, பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலம் ஜப்பானின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குள் அவர் இக்கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
மேலும், 'சீனா இத்தீவுக்கு உரிமை கோரும் சவாலைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே எமது இலக்கு எனவும், ஜப்பான் சீனா ஆகியவற்றுக்கிடையேயான உறவு மோசமடைய அனுமதிக்கபோவதில்லை' என்றும் கூறியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜப்பானின் 480 இடங்களுக்கான பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன் படி கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த போதும் 2009 ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்திருந்த ஜப்பான் விடுதலைக் கட்சி மறுபடி வெற்றி வாகை சூடியுள்ளது.
இதற்குக் காரணம் 2009 ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியிருந்த ஜனநாயகக் கட்சி அணுசக்தி நிலையங்களை மூடுதல், சுனாமி நிவாரணம் ஆகிய சர்ச்சைகளை முறையாகக் கையாளவில்லை என்பதனால் ஆகும். இதனால் தற்போது நடந்த தேர்தலுக்கு முன் ஆறு தடவை ஜனநாயகக் கட்சியின் உள்ளே பிரதமர்கள் மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து நிலமையை சமாளிக்க முடியாமல் பிரதமர் நோடா கடந்த மாதம் பாராளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம் நேற்று தேர்தல் இடம்பெற்றது.
இத்தேர்தலில் மொத்தம் உள்ள 480 ஆசனங்களில் ஜனநாயகக் கட்சி வெறும் 57 ஆசனங்களையும் ஜனநாயக விடுதலைக் கட்சி 294 ஆசங்களையும் பெற்றுள்ளன. இதேவேளை தற்போது பிரதமராக வெற்றி பெற்றுள்ள அபே ஏற்கனவே 2006 தொடக்கம் 2007 வரை ஜப்பான் பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சர்ச்சைக்குரிய தீவை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது: ஜப்பானின் புதிய பிரதமர்