Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதா, இல்லையா என கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இன்னமும் உறுதியான முடிவு எடுக்கவில்லை.
இந்நிலையில், பிரதமரின் குழப்பத்தை தீர்ப்பதற்கு உதவும் வகையில் கனடா மிரர் இணையத்தளம், கனேடிய மனிதவுரிமை மையத்துடன் இணைந்து ஓர் சுயாதீன இணையத்தள கருத்துக்கணிப்பை நடத்துகிறது.

இக்கருத்துக்கணிப்பு டிசம்பர் 14ம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 வரை தொடரும் எனவும் பின்னர் இதில் பெறப்படும் முடிவுகள், கனேடிய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாக்கெடுப்பில் பங்கெடுத்து பொதுமக்கள் தங்களது விருப்பத்தை கனேடிய அரசுக்கு தெரிவிக்கலாம் எனவும், ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாது பட்சத்தில் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை தாம் புறக்கணிக்க போவதாக கனேடிய அரசு முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

http://polldaddy.com/poll/6751496/

1 Response to இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கனடா புறக்கணிக்க வேண்டுமா?: இணையத்தள கருத்துக்கணிப்பு

  1. புறக்கணிக்குமாறு கேட்டுகொள்கிறோம்..நன்றி

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com