Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தொடர்ந்து பெய்யும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 28,297 குடும்பங்களைச் சேர்ந்த 101,569 (ஒருலட்சத்து 1,569) பேர்பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 ஆயிரத்துக்கும்மேற்பட்டகுடும்பங்களைச்சேர்ந்த 35 ஆயிரம்பேர்நலன்புரிநிலையங்களில்தற்காலிகமாகத்தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 20 ஆயிரத்துக்குமேற்பட்டவீடுகள்முற்றாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள இடர் முகாமைத்துவப் பிரிவின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
  
முல்லைத்தீவு

இந்த அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டமே பெரிதும் பாதிப்புக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரத்து 261 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இடர்முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் சி.எச்.ஜி.பிரியந்த தெரிவித்தார்.

ஒட்டு சுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் 2 ஆயிரத்து 147 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 796 பேரும், புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர்பிரிவில் 5,336 குடும்பங்களைச் சேர்ந்த 16,899 பேரும், கரைதுறைப்பற்றில் 2,338 குடும்பங்களைச்சேர்ந்த 8,063 பேரும், துணுக்காய் பிரதேசத்தில் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 3,359 பேரும், மாந்தை கிழக்கில் 277 குடும்பங்களைச் சேர்ந்த 857 பேரும், வெலிஓயாவில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரும்பாதிப்புக்குள்ளானதாகவும், இவர்கள் 50 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

வெள்ள நீர் வீதிகளில் மேவிப்பாய்வதால் வவுனியா  முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்புக்கான போக்குவரத்து நண்பகல் தடைப்பட்டிருந்தது.

முல்லைத்தீவில் மட்டும் 16,150 வீடுகள் பெரும் சேதமாகனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி

கிளிநொச்சிமாவட்டத்தில்ஏற்பட்டுள்ளவெள்ளப்பெருக்குக்காரணமாககரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய மூன்று பிரதேச செயலகங்களையும் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 68 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில்ஆயிரத்து 228 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளன.

கரைச்சிப் பிரதேச செயலர்பிரிவுகளில் உள்ள 344 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 381 பேர் 9 தற்காலிக நலன்புரிமுகாம்களிலும் கண்டாவளை பிரதேசசெயலர்பிரிவிலுள்ள 702 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 430 பேர் 14 நலன்புரி முகாம்களிலும் பூநகரி பிரதேசசெயலர்பிரிவிலுள்ள 182 குடும்பங்களைச்சேர்ந்த 582 பேர் நலன்புரி முகாம்களிலுமாக சுமார் 25 தற்காலிக நலன்புரிமுகாம்களில்ஆயிரத்து 228 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 373 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதிகேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

 இந்த மக்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா

வவுனியா மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலர் பிரிவிலும் சுமார் 9,123 குடும்பங்களைச் சேர்ந்த 34,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செட்டிக் குளம் பிரதேசசெயலர்பிரிவில் 1,865 குடும்பங்களைச் சேர்ந்த 6,919 பேரும்

நெடுங்கேணி பிரதேச செயலர்பிரிவில் 6,714 குடும்பங்களைச் சேர்ந்த 26,341 பேரும், வவுனியா சிங்கள பிரதேசசெயலர்பிரிவில் 514 குடும்பங்களைச்சேர்ந்த 819 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்; இவர்கள் 67 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் ஜானகஜயவர்த்தன தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் 5,865 குடும்பங்களைச் சேர்ந்த 23,300 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேச செயலர்பிரிவில் 248 குடும்பங்களைச் சேர்ந்த 906 பேரும், முசலி பிரதேச செயலர்பிரிவில் 2,960 குடும்பங்களைச் சேர்ந்த 12,868 பேரும், மடு பிரதேச செயலர்பிரிவில் 405 குடும்பங்களைச் சேர்ந்த 6,471 பேரும், நானாட்டான் பிரதேசசெயலர்பிரிவில் 1,138 குடும்பங்களைச் சேர்ந்த 4,093 பேரும், மாந்தைமேற்கில் 1,105 குடும்பங்களைச்சேர்ந்த 3,942 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீதிகளில் வெள்ளம் மேவிப்பாய்வதால் மன்னார்  யாழ்ப்பாணம், மன்னார்  மதவாச்சி வீதிகளின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. முசலிப் பகுதிக்கான தரை வழிப் பகுதிப் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 1,800 குடும்பங்களைச் சேர்ந்த 1,211 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to வெள்ளத்தால் மக்கள் அந்தரிப்பு; வடக்கில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com