Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
 இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்களை எடுத்தது. மகேந்திர சிங் தோனி அதிரடியாக 113 ஓட்டங்களை எடுத்தார். சுரேஷ் ரைனா 43 ஓட்டங்களை எடுத்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 29 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்திருந்தது. எனினும் தோனி நிதானமாக துடுப்பெடுத்தாடியதால் ஓட்ட எண்ணிக்கையை வெகுவாக உயர்த்த முடிந்தது.

பந்துவீச்சில் ஜுனைத் கான் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.1 பந்துவீச்சில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. நாசீர் ஜாம்ஷெத் தனது இரண்டாவது சதத்தை பூர்த்திசெய்தார். இவரது முதல் சதமும் இந்தியாவுக்கு எதிராக இந்த ஆண்டு பெறப்பட்டதே.

இந்தியா இப்போட்டியில் தோல்வி அடைந்ததால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். எனினும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அதிரடி பார்த்ததில் ஒரு உற்சாக மகிழ்ச்சி.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி கொல்கத்தாவில் எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி நடைபெறுகிறது.

0 Responses to தோனியின் அதிரடி ஆட்டம் வீணானது!: தோற்றது இந்தியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com