Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இது தொடர்பில் கருத்துரைக்கையில், 13வது திருத்த சட்டத்தில் திருத்தங்களை செய்வது குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானவிக்கவில்லை. அதில் திருத்தங்கள் செய்ய தயார் எனினும் அது பாராளுமன்ற தெரிவுக்குழு அமர்வுகளின் மூலமாக எட்டப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எந்த நேரத்திலும் தமிழ் தேசிய  கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும், பேச்சுவார்த்தைகள் தொடர்பில் முனைப்பு காட்டவில்லை எனும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு மக்கள் தொகை பரம்பல் திட்டமிட்டு மாற்றப்படுவதையே எதிர்க்கிறோம் எனவும், மற்றும்படி எந்த சமூகத்தவரும் வடக்கு, கிழக்கிலேயே வந்து குடியேறலாம். அனைவரையும் வரவேற்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

காலனித்துவ குடியேற்றங்கள் மூலம் குடித்தொகை பரம்பல் மாற்றப்படுவதை கடுமையாக எதிர்க்கிறோம். இதன்  ஒரு கட்டமாககவே இராணுவ குடும்பங்கள் வடக்கு கிழக்கில் குடியேற்றப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான சிங்களவர்கள் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களுடன் நண்பர்களாக இருந்து வருகின்றனர். நாங்கள் எந்தவொரு இனத்தவரையும் வடக்கு மற்றும் கிழக்கில்  வந்து தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: மீண்டும் இலங்கை அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com