Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதுக்கோட்டையில் தி.மு.க இளைஞரணி புதிய பொருப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை நடந்தது. இந்த விழாவை தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், திராவிட இயக்கத்தை வளர்த்த அண்ணா கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று கொள்கைகளை வகுத்து, அதன்படி இயக்கம் நடத்தினார். இவற்றில் கட்டுப்பாடு என்பது மிக முக்கியம் என்பதால், இளைஞர்கள் அனைவரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என, தி.மு.க., தலைவர் கலைஞர் வலியுறுத்தினார். அவரது இதே கருத்தைத் தான் நானும் வலியுறுத்துகிறேன். 

தொடர்ந்து நடைபெற்று வரும் இளைஞர் பாசறை கூட்டத்தில் தெரிவித்ததைப் போல திராவிட இனம், மொழி, உணர்வை வலுப்படுத்தவே திமுக இளைஞரணி பாசறை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மற்ற இடங்களில் நடைபெற்றதைவிட புதுக்கோட்டையில் நடைபெறும் இந்த பாசறைக் கூட்டம் முதலிடம் பெற வேண்டும். அதற்கேட்ப நீங்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

0 Responses to இளைஞரணியினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com