டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டம் நாளை கூடுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்கிறார் என்று தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்த தேசிய வளர்ச்சி குழுக்கூட்டத்தில் 12 வது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான ஒப்புதல் பெறப்படுகிறது. தேசிய வளர்ச்சிக்கு குழுவின் 57 வது கூட்டம் டெல்லி விக்யான் பவனில் நாளை நடக்கிறது. கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை வகிக்கிறார். இதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் 12 வது ஐந்தாண்டுத் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டதாகவும், நாளை நடக்க உள்ள கூட்டத்தில் 12 வது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படவும் இந்த தேசியக் குழுக் கூட்டம் கூடுவதாகத் தெரிகிறது. இந்த குழு மாநில வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் கூடுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
ஜெயலலிதா தனி விமானம் மூலம் அகமதாபாத் சென்று அங்கு குஜராத் முதல்வராக பதவி ஏற்க உள்ள மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், தேசியக் குழுக் கூட்டத்துக்கும் செல்வார் என்றும் எதிர்பார்ர்க்கப் படுகிறது.
0 Responses to பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது : ஜெ கலந்து கொள்கிறார்!