பாலியல் வன்கொடுமைகளுக்கான தண்டனைகள் குறித்த சட்டதிருத்தம் பற்றி விவாதிக்க நாளை நாடாளுமன்ற மத்தியக் குழுக் கூட்டம் கூடவுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான வெங்கைய நாயுடு தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நடைபெறவுள்ள இந்த மத்தியக் குழுவில் சட்ட வல்லுனர்கள், டெல்லி காவல்துறை அலுவலர்கள், முக்கிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இது குறித்து மத்தியகுழுத் தலைவர் வெங்கைய நாயுடு கருத்து தெரிவிக்கையில், பாலியல் வன்கொடுமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க மத்திய அரசு தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட டெல்லி மாணவிக்கு நீதிகிடைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டியது மிக அவசியம் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to பாலியல் வன்கொடுமைகளுக்கான தண்டனைகள் குறித்த சட்டதிருத்தம்: நாளை மத்திய குழுக்கூட்டம்