Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் போட்டியில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் படு மோசமான துடுப்பாட்டத்தை வழங்கி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 316 ஓட்டங்களையும் இங்கிலாந்து 523 ஓட்டங்களையும் எடுத்தது. இதையடுத்து இன்று இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, கம்பீர், ஷேவாக் இணைப்பாட்டத்தில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. கம்பீர் 40 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். ஷேவாக் 49 ஓட்டங்களை பெற்ற போது ஆட்டமிழந்தார். புஜாரா 8 ஓட்டங்களுடன் ரன் அவுட்டில் ஆட்டமிழக்க, சச்சின் 5 ரன்களுடன் கேச் முறையில் ஆட்டமிழந்தார். விராத் கோலி 20 ஓட்டங்களுடனும் யுவராஜ் சிங் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கேப்டன் தோனி எந்தவித ஓட்டமும் பெறாது டக்கில் ஆட்டமிழந்தார்.

களத்தில் தற்போது அஷ்வின் 84 ஓட்டங்களுடனும், ஓஜா 3 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர். நான்காம் நாள் ஆட்டம் முடிவடையும் போது இந்திய அணி  239 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. இங்கிலாந்தின் பந்துவீச்சில் ஃபன் 3 விக்கெட்டுக்களையும் ஆண்டர்சன், ஸ்வான் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து எப்படியும் இந்த போட்டியில் வெற்றி பெறும் என்ற போதும் அஷ்வினின் நிதானமான துடுப்பாட்டம் இங்கிலாந்தின் வெற்றியை தாமதப்படுத்தி வருகிறது. ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றி பெற்றால் 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறும். இறுதி டெஸ்ட் போட்டி நாக்பூரில், டிசம்பர் 13ம் திகதி தொடங்குகிறது.

0 Responses to வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து : இந்தியா மீண்டும் மோசமான துடுப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com