Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக மாவீரர் தின நிகழ்வினை புலம் பெயர் நாடுகளில் இருந்து நேரடியாக GTV SPV  தொலைக்காட்சி அண்மையில் வழங்கியிருந்தது.

இது எம் தேசத்துக்காக எம் இனத்துக்காக தம் உயிரைக்  கொடையாக வழங்கிய மாவீரர் செல்வங்களின் தியாகத்திற்குக்  கிடைத்த கெளரவமாகும். மாவீரர்களை ஒரு தனிப்பட்ட மனிதரோ ஒரு பிரதேசமோ உரிமை கொண்டாட முடியாது. மாவீரர்கள் ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்குமான சொத்து. மாவீரர்கள் தமிழினத்தின் எழுச்சியின் வடிவம்.

எம் நெஞ்சில் மாவீர செல்வங்களின் நினைவுகள் இருக்கும் மட்டும் தமிழீழத்தின் விடியலை யாராலும் தடுத்து விட முடியாது. இரண்டாயிரம் வருடங்களுக்குப்  பிறகு தமிழினம் மீண்டும் வீர மறவர்களால் புது எழுச்சி வரலாற்றைப்  படைத்திருக்கிறது.

ஒரு ஊடகம் நினைத்தால் ஒரு அரசின் வெளியுறவு கொள்கையிலேயே மாற்றத்தை கொண்டு வரலாம் என்பதும் ஒரு ஊடகம் நினைத்தால் ஒரு இன அழிவுக்கே வித்திடலாம் என்பதையும் கடந்த கால வரலாறுகள் காட்டி நிற்கின்றன.

எனவே GTV SPV , புதிய தலை முறை மற்றும் ஏனைய ஊடகங்கள் தமிழின விடிவுக்கு தொடர்ந்தும் இதே பங்களிப்பினை செய்யும் என தமிழினம் எதிர்ப் பார்க்கிறது. தமிழர் தேசத்தை அடைய வரலாற்றுப்பாதையில் அர்ப்பணிப்புடன் செயற்படும் தொலைக்காட்சியே உலக தமிழர்களின் தொலைக்காட்சி என மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்.

GTV SPV யின் மாவீரர் தின ஒளிபரப்பு இவ் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் தொலைக்காட்சியாக மட்டுமில்லாமல்  தமிழினத்துக்கான தொலைக்காட்சியாக மலரட்டும்.

நன்றி.

1 Response to இந்திய தொலைக்காட்சி GTV SPVயில் மாவீரர் நாள் நேரடி ஒளிபரப்பானது (காணொளி இணைப்பு)

  1. அடுத்த வருடம் மாவீரர் தின நிகழ்வுகளை அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்ப இது ஒரு முன்னோடியக இருக்கட்டும். நன்றிகள்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com